Home சினிமா ஆர்யாவ பாத்தா அடிச்சிடுவேன்: எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாசினி

ஆர்யாவ பாத்தா அடிச்சிடுவேன்: எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாசினி

ஆர்யா – சாயிஷா திருமணம் நிச்சயமாகியிருக்கும் நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாசினி அந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

சென்னை: ஆர்யா – சாயிஷா திருமணம் நிச்சயமாகியிருக்கும் நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாசினி அந்நிகழ்ச்சியின் மீதான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கடந்த வருடம் ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. 

கடைசியில் அதில் இலங்கை மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 பெண்களை இறுதியாக தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.ஆனால், மூவரும் தனக்கு பொருத்தமானவர்கள் தான், ஒருவரை தேர்ந்தெடுத்து மற்றா இருவரை காயப்படுத்த விருப்பமில்லை என ஒரு காரணத்தை கூறி நழுவினார். இதனால், மக்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளானார் ஆர்யா.

arya and sayyeshaa

அதையடுத்து ஆர்யா – சாயிஷா காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தும்படி இருவரும் காதலர் தினத்தன்று வரும் மார்ச் மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் குறித்து எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்களில் ஒருவரான குஹாசினி தனியார் இணையதள ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார் அதில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒருவகையான முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி. ஆர்யா – சாயிஷா திருமணம் குறித்து பலரும் என்னைக் கேட்கிறார்கள்.

kuhasini

அதை அவர்கள் ஆர்யாவிடமே கேட்டுக் கொள்ளலாமே. இறுதியாக 3 பேரை தேர்வு செய்து அதில் ஒருவரையும் தேர்வு செய்யாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்திவிட்டார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியிலிருந்து யாருக்காவது அழைப்பு வந்தால் கலந்துகொள்ளாதீர்கள்.

இப்போது ஆர்யா – சாயிஷா திருமணம் குறித்து கேள்விப்பட்டவுடன் கோபமடைந்தேன்.
ஆர்யா கேமிராவைப் பார்த்தால் அப்படியே மாறிவிடுவார். அவரைப் பார்த்தால் அடித்துவிடுவேன். திருமணத்துக்கு அழைத்தாலும் நான் போகமாட்டேன். நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு இரண்டு மூன்று பெரிய படங்களிலிருந்து அழைப்பு வந்தது. நான் இன்டிபென்டென்ட் ஆல்பம் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

8.5 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய கும்பல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடை தற்போது வரை நீடிக்கிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக பிற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படாமல் இருக்கும் சூழலில், வெளிநாடுகளில்...

சென்னை அணிக்கு முதல் தோல்வி – பெங்களூர் வெற்றி – ISL திருவிழா

ISL கால்பந்து திருவிழாவில் ரசிகர்களுக்கு விருந்தாக தினமும் ஒரு போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் ஜி.எம்.சி மைதானத்தில் சென்னை Vs பெங்களூர் அணிகளுக்குமான போட்டி...

தமிழகத்தில் புரெவி புயலுக்கு 7 பேர் பலி!

தமிழகத்தில் புறவி புயல் வலுவிழந்த நிலையிலும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அதேசமயம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த இன்னொரு நாடு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 62 லட்சத்து 30 ஆயிரத்து 912 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 58...
Do NOT follow this link or you will be banned from the site!