Home சினிமா ஆரியுடன் காதலில் விழுந்த பிக் பாஸ் ஐஸ்வர்யா!

ஆரியுடன் காதலில் விழுந்த பிக் பாஸ் ஐஸ்வர்யா!

பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆரி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.

சென்னை: பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் ஆரி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தனது முதல் படமாக காதல் படம் ஒன்றை தேர்வு செய்துள்ளார்.

நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.

கிரியேட்டிவ் டீம்ஸ், க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் என இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ’அய்யனார்’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்குகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘96’ திரைப்பட பாணியில், முன்னாள் காதலர்கள் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாக கொண்டது தான் இப்படம் என கூறப்படுகிறது.

இது குறித்து படக்குழுவிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என ஏகபட்ட தடைகள் இருந்த காலங்கள் மலையேறி தற்போது காதலுக்கு காதலே எமனாக வந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. இதை பிரதிபளிக்கும் வகையில் தான் இந்த படம் உருவாகப்போவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 40 நாட்களுக்கு சென்னையிலும், பின்னர் 2 பாடல் காட்சிகள் வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு,  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார். சொத்துகுவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற சசிகலாக்கு...

கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் மோடி – கருணாஸ் எம்எல்ஏ

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தெய்வீக பரப்புரைக்காக மதுரை வந்த நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அழகு முதல் ஆண்மை வரை… கற்றாழையின் டாப் பயன்கள்!

நம் வீட்டிலேயே வளர்க்கக் கூடிய எளிய தாவரம் கற்றாழை. ஆரோக்கியம் முதல் அழகு வரை அது அள்ளித்தரும் பலன்கள் ஏராளம். வாரத்துக்கு 2-3 முறை கற்றாழையை உட்கொண்டு வந்தால் உடலில்...

குடியரசு தின விழா- திருப்பத்தூர் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். திருப்பத்தூர்...
Do NOT follow this link or you will be banned from the site!