Home சினிமா 'ஆராரிராரோ ராரோ... ராரோ'...: அஜித்தின் விஸ்வாசம் பட பாடல் செய்த சாதனை!

‘ஆராரிராரோ ராரோ… ராரோ’…: அஜித்தின் விஸ்வாசம் பட பாடல் செய்த சாதனை!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

 சென்னை: விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாத வெளியான படம் விஸ்வாசம்.சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இதில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி சுமார் 100 நாட்கள் மேல் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இப்படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் பாசத்தை வெளிக்காட்டும் விதமான ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. டி.இமான் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் உருவான அந்த பாடல் கேட்கும் பொது, மகள்களை பெற்ற அப்பாக்களின் கண்களில் கண்டிப்பாகக் கண்ணீர் வழிந்திருக்கும்.

இந்நிலையில் இந்த பாடலில் லிரிக்கல் வீடியோ யூடியூபில் சாதனை படைத்துள்ளது. ஆம்… இதுவரை 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதை மகிழ்ச்சியாக #70MViewsForKannaanaKanney என்ற ஹாஸ் டாக் மூலம் சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது. அந்த ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறுமலையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து – 9 பேர் படுகாயம்

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...

லிவ்வீங் டூ கெதரில் இருந்தால் பாலியல் வன்கொடுமையாகுமா? பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உத்திர பிரதேசத்தை சேர்ந்த வினய் பிரதாப் சிங் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக வினய் பிரதாப்...

பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பித்தப்பை கல்… அறிகுறிகள் அறிவோம்!

நாம் சாப்பிட்ட உணவை செரிக்க பல நொதிகள் செரிமான மண்டலத்தில் உருவாகிறது. கொழுப்பை செரிக்கக் கல்லீரலில் பித்தநீர் உருவாகிறது. இது பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு duodenum எனப்படும் சிறுகுடலின் முதல் பகுதியில்...

கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

ஈரோடு பவானி அருகே கால்வாயில் குளித்த இளம்பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நீரில் மூழ்கிய அவரது தந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...
TopTamilNews