Home ஆன்மிகம் ஆரம்பமானது அத்திவரதர் திருவிழா; விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

ஆரம்பமானது அத்திவரதர் திருவிழா; விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்தி வரதர் வருகையால் காஞ்சிபுரம் விழா கோலம் பூண்டுள்ளது. 

 
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்தி வரதர் வருகையால் காஞ்சிபுரம் விழா கோலம் பூண்டுள்ளது. 

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி வெளியில் எடுக்கப்பட்ட இந்த அத்தி வரதரை ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு மகிழ்ச்சியடைவர். 

athivaradhar

இந்நிலையில் அத்தி வரதர்  திருவிழா  இன்று கோலாகலமாகத் தொடங்கியது.  அதிகாலை 5 மணிக்கு அத்தி வரதருக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றதுடன்,   இட்லி, வெண்பொங்கல், சக்கரை பொங்கல், லட்டு, ஜிலேபி போன்றவை  நெய்வைத்யமாக  படைக்கப்பட்டது. இதன்பின்னர் காலை 6 மணி அளவில், அத்தி வரதரைத் தரிசிக்கப் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  சிறப்பு வழிபாடு நடத்தினார்.  அத்தி வரதரை  காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

athivaradhar

48 நாட்களுக்குக் காலை 6 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும்  அத்தி வரதர் காட்சி அளிக்க உள்ளார். 20 நாட்கள் சயன கோலத்திலும், 28 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் காட்சியளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது 

மாவட்ட செய்திகள்

Most Popular

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில்...

சென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்!

சென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி...

காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!

தமிழகத்தில் நிவர் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 300 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது....
Do NOT follow this link or you will be banned from the site!