Home அரசியல் ஆமா ஆமா ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன்தான்: கருணாஸ் அதிரடி

ஆமா ஆமா ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன்தான்: கருணாஸ் அதிரடி

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன் என உலகுக்கே தெரியும் என எம்.எல்.ஏ கருணாஸ் கூறியிருக்கிறார்

முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் முதல்வரையும், காவல்துறை அதிகாரியையும் மிகவும் தரக்குறைவாக பேசினார். மேலும், கூவத்தூர் என்ற இடம் இருப்பதையே நான்தான் சசிகலாவிடம் கூறினேன் என பல விவகாரங்களை பேசினார். அவரது இந்த பேச்சு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து அவர் மீது 8 பிரிவுகள் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கருணாஸின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா தரப்பினரிடம் கருணாஸ் பணம் வாங்கியிருப்பார். அவர் பேசியதற்கான பலனை அனுபவிப்பார் என கூறினார். இதற்கிடையே கருணஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் எங்கும் தலைமறைவாகவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ், முழு வீடியோ பார்த்தால் நான் பேசியதில் தவறில்லை என்பது புரியும். பொதுமேடையில் ஒருமையிலி பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். முக்குலத்தோர் இளைஞர்களை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தாக்குகின்றனர். எம்.எல்.ஏவான எனக்கே இவ்வளவு பிரச்னைகள் வருகிறதென்றால் சாதாரண மக்கள் எவ்வளவு பிரச்னைகளை சந்திப்பார்கள்.
கூவத்தூர் விவகாரம் குறித்து தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன் என்பது இந்த உலகத்திற்கே தெரியும் என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓராண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள்” – ஆட்சியர் சிவன்அருள்

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் தெரிவித்தார்.

தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இப்ராஹீம் என்பவரின் மகன் ரகுமான்(36). இவர் நேற்று இரவு காரில் விருது நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை...

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீருடன் வெண்மை நிறத்தில் விஷ நுரையும் கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்...

விஞ்ஞானியைக் கொன்ற தீவிரவாதிகள் – ஈரானில் நடந்த கொடூரம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் ஈரானிய...
Do NOT follow this link or you will be banned from the site!