ஆப்கானிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு.. 15க்கும் மேற்பட்டோர் பலி!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் திடீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

afganstian

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகரில் உள்ள ஒரு பகுதியில் நேற்று இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியை சுற்றி தான் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகளின் தூதரகங்களும் மற்றும் பல சர்வதேச நிறுவனங்களும் உள்ளன. இந்த பயங்கரவாத சம்பவம் இவற்றை குறிவைத்து நிகழ்ந்திருக்கின்றன. இச்சம்பவத்திற்கு பயங்கரவாத அமைப்பான தாலிபான் முழுவதுமாக பொறுப்பேற்று இருக்கிறது. 

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், காபூல் நகரில் வெளிப்பகுதியில் உள்ள ஒரு டிராக்டரில் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதில் தீ வைத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விவரங்களை வெளியிட்டார். 

bomb attack

மேலும் தாலிபான் அமைப்பின் முகாம்களை ஆப்கானிஸ்தான் ராணுவம் தகர்த்தெறிந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள இவை இரண்டிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தலிபான் அமைப்பு நிகழ்த்தியிருக்கிறது. 

விரைவில் 5 ராணுவ தளங்களை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும் தருவாயில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

கேரளாவில் விமான விபத்து : அவரச உதவி எண்கள் அறிவிப்பு!

துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது நேற்று விபத்திற்குள்ளானது. 191 பேர் பயணித்த இந்த விமான விபத்தில் விமானி டி.எம்.சாதே , துணை விமானி, குழந்தை உட்பட 17...

கேரள விமான விபத்தில் 20 பேர் மரணம்: 2 விமானிகளும் உயிரிழப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து இந்தியர்களை கேரளா அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி...

காலை நேரம்… தெருவில் கிடந்த மனித மண்டை ஓடு… பதறிய பழனி மக்கள்!- காரணம் மந்திரவாதிகளா? குடிமன்னர்களா?

தெருவில் மனிதர்களின் மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை பார்த்து பழனி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மந்திரவாதிகள் இப்படி செய்தார்களா அல்லது குடிமன்னர்கள் இந்த எலும்பு  கூட்டை போட்டுச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை...

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர தின விழா ஒத்திகை! போக்குவரத்து மாற்றம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் தொடர்வதால் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது. அதன்படி  ஆகஸ்ட் 15 ஆம் தேதி 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சமூக...