Home சினிமா ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளது: விமல் படத்தை தடை செய்யக்கோரி பெண்கள் போராட்டம்!

ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளது: விமல் படத்தை தடை செய்யக்கோரி பெண்கள் போராட்டம்!

ஆபாச காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால் விமல் படத்தை தடை செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை: ஆபாச காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால் விமல் படத்தை தடை செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர்கள் விமல், ஆனந்தராஜ், மன்சூர் அலி கான் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்ப்டம், ‘இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு’. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஆஷ்னா சவேரி நடித்துள்ளார்.

இப்படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் என்றும், பெண்களை கேலி செய்யும் வசனங்களும் நிறைய இடம்பெற்றுள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ivanukku

இந்நிலையில், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்பிளக்ஸுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், தியேட்டர் வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த இப்பட போஸ்டர்களை செருப்பால் அடித்ததுடன் கிழித்து எறிந்தனர். 

மேலும், இந்த ஆபாச படத்திற்கு உடனே தடை விதிக்கக் கோரி தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தவர்களிடம் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த தியேட்டரில் அடுத்தடுத்து திரையிடப்பட இருந்த சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்குகளுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை....

துபாய் இறகுகள்… ராஜஸ்தான் கற்கள்… ஜெயலலிதாவின் பீனிக்ஸ் மண்டபத்தில் என்ன ஸ்பெஷல்?

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு...

‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...

கருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!