Home தமிழகம் ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

ஆபாச இணையதளங்களால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து தப்புவது குறித்த தீர்க்கமான தீர்வுகளை மனநல மருத்துவர் ஷாலினி அறிவுறுத்தியுள்ளார்.

ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!

சென்னை: ஆபாச இணையதளங்களால் ஏற்படும் விளைவுகள், அதிலிருந்து தப்புவது குறித்த தீர்க்கமான தீர்வுகளை மனநல மருத்துவர் ஷாலினி அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியாவைக் குறிவைத்து பல ஆபாச இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து அந்த ஆபாச இணையதளங்கள் செயல்படுகிறது. இது பெரும்பாலான ஆண்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. 

இது குறித்து பிரபல உளவியல் நிபுணர் டாக்டர் ஷாலினியிடம், இளையதலைமுறையினரை நாசமாக்கும் ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி என்று கேட்டோம். அவர் கூறியதாவது;- ‘ஆபாச இணையதளங்கள்  என்பது ஆண்கள் அல்லது பெண்களிடமிருந்து பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழி. அந்த பணத்தை முதலில் எடுத்ததும் அவங்க கேட்கப்போறது இல்லை.முதலில் இவர்களுக்கு கவர்ச்சியை தூண்டக்கூடிய கிளர்ச்சியை தூண்டக்கூடிய விஷயங்களை இலவசமாக கொடுத்துட்டு, அவங்கள அடிமையாகிட்ட பிறகு அவங்ககிட்ட காசு கேட்பாங்க. இதுக்கு அடிமையாகுறது ரொம்ப சுலபம். ஏன்னா வயசுக்கு வந்துட்ட பிறகு, மூளையின் முதல் தேவையே பாலியல் வேட்கை தான். அது இயற்கையுடைய வடிவமைப்பு, அதை யாரும் வேணும்னு தேடுறது இல்லை. 

shalini

இயல்பாகவே ஒரு பெண் குழந்தை இல்லாத ஒரு காட்டில், ஒரு ஆணை தனித்து வளர்த்தாலும், அவனுக்கு பெண் துணை தேவைப்படுகிறது. இயற்கையாகவே அந்த உந்துதல் இருக்கிறது.  சிறு குழந்தைகளுக்கு சாப்பாடு எப்படி பிடிக்குமோ இனிப்பு, விளையாட்டு பொருட்களை எப்படி பிடிக்குமோ அந்த மாதிரி, வயசுக்கு வந்தபிறகு எதிர்பாலினரையோ, அல்லது சில சமயங்களில் ஓர் பாலினத்தவரையோ பிடிக்கிறது. இதை நோக்கி தான் அவர்களின் வேட்டை குணம் இருக்கு அப்படிங்குறப்போ, இதை பயன்[அடுத்த தான் இது போன்ற ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் கொடுக்குறாங்க. குழந்தைகளுக்குத் தெரியாது, இவங்க நம்மல யூஸ் பண்ணிக்குறாங்க, நம்மகிட்ட இருந்து காசு பிடிக்குறாங்கன்னு தெரியாது.  இது நமக்கு யாரும் சொல்லல. சீக்ரெட்டா உட்காந்து பார்க்கறதுக்கு, நம்ம பீலிங்ஸ்-க்கு யூஸ் ஆகுதுன்னு திரும்ப திரும்ப அவங்க பார்க்குறதுனால சில வாரங்களிலேயே அவங்க அடிமையாகிடுறாங்க. விடிய விடிய இதை பார்க்குறதுனால, யாராவது வந்து கேட்டா அடிக்குறது, கதவை உடைக்குறதுன்னு வீட்டில் அசம்பாவிதம் நடக்கிறது. 

 

பெற்றோர்களால்  இதை கேட்க முடியல, வெளியில் சொந்த காரங்க கிட்ட சொல்லமுடியல, இதை ரகசியமாக வைக்கணும்ன்னு அவங்க நம்புறாங்க. இதனாலயே இது தொடர்ந்து நடக்கிறது.  இதனால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படுது, சரி இவ்வளவு ஆசைபடுறானே கல்யாணம் பண்ணி வச்சா, கலக்குவான்னு பார்த்தா, அந்த சமயத்துல அவனுக்கு எதுவும் வேலை செய்யமாட்டுது. ஏன்னா அவனுக்கு பார்க்கவும் , என்ஜாய் பண்ணவும் தான் தெரியுதே தவிர,ஒரு உண்மையான பெண்ணிடம் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியல. மூன்றாவது பார்த்தீங்கன்னா, சினிமாக்களில் பாலியல் காட்சிகளில் நடிக்கும் பெண்கள், அதற்கு ஏற்றாற்போல் உடலை தகவமைப்பு செஞ்சிக்குறாங்க. அவங்க சாதாரண ஆண், பெண்களை விட மிகையானவர்களாக இருக்கிறார்கள். இதை பார்த்தே வளர்ந்த பையன் என்ன நெனைக்குறான், ஒரு ஆண்ணா இப்படி தான் இருக்கணும், ஒரு பெண்ணா இப்படி தான் இருக்கணும் நெனைக்குறான். அதனால சாதாரண பெண்ணை பார்க்கும் போது, அவனால எதுவும் செய்ய முடியல. அந்த காட்சியில் வந்த மாதிரி தான் இல்லைன்னு நினைச்சி அவன் மனசு வெந்து போயிடுது. அது இலவசமாக கிடைக்குது. அது விஷம், அதை அதிலிருந்து வெளியே வருவது அவசியம். அதனால நம்ம இழக்குறோம் என்று பார்த்தோம்னா, ஆண்கள் அவங்க ஆண்மையையே இழக்குறாங்க. அது ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரியுது. அதன்  பிறகு அவங்களுக்கு சிகிச்சை கொடுத்து தான் அவங்கள மீட்க வேண்டியதாக இருக்கிறது’. என்றார்.  

ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...

தருமபுரி அருகே முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழப்பு!

தருமபுரி தருமபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி...
- Advertisment -
TopTamilNews