Home அரசியல் 'ஆந்திர முதல்வர் என்னை பாலோ பண்ணுறாரு போல' : சீமான் தகவல்!

‘ஆந்திர முதல்வர் என்னை பாலோ பண்ணுறாரு போல’ : சீமான் தகவல்!

ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்களை  அமல்படுத்தி மக்களைக் கவர்ந்து வருகிறார்

நெல்லை: நான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி  செயல்படுத்தி வருகிறார் என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

jagan

ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்களை  அமல்படுத்தி மக்களைக் கவர்ந்து வருகிறார். ஆனால்  முதல்வராவதற்கு முன்பே மக்கள்படும் துயரங்களைக் கேட்டு அறிந்துகொண்ட ஜெகன்மோகன் ரெட்டி அதன் வெளிப்பாடாகவே சிறப்பு திட்டங்களை அறிவிக்கிறார் என்று சொல்லாம். குறிப்பாக போலீஸுக்கு  வாரம் ஒருநாள் விடுமுறை, ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம், பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.  இதனால் ஆந்திர மக்கள் ஜெகனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். 

seeman

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த  சீமான், ‘தமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். என்னுடைய புத்தகத்தை அவர் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அளிப்பேன் என்று கூறிய எனது திட்டம்  அங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. எனது திட்டங்கள்  அனைத்தும் ஆந்திராவில் நிறைவேறி வருகிறது’ என்றார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சாலை பாதுகாப்பு மாத விழா… வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…

திருவள்ளூர் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திருவள்ளூர் போக்குவரத்து காவல்துறையினர், நூதன முறையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருவள்ளூர் வட்டாரப்...

திமுக எடுத்த அஸ்திரம்… தமிழகத்திலும் தட்டுத்தடுமாறும் காங்கிரஸ்

திமுக எடுத்த அஸ்திரத்தால் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தட்டுத்தடுமாறுகிறது காங்கிரஸ் என்றும், கூட்டணியில் இருந்தாலும் சுயமாக சில முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் தற்போது திமுகவை மீறி எந்த செயலையும் செய்ய...

வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை; ஆய்வாளர்கள் கூறும் 5 காரணங்கள்!

வரலாறு காணாத அளவிற்கு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 50 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது கவனிக்கத்தக்கது. ரிலையன்ஸ், பஜாஜ்...

பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா: பள்ளி மூடல்!

சேலம் அருகே பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா உறுதியாகி இருப்பதால், பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் கருமந்துறை அருகே, கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை...
Do NOT follow this link or you will be banned from the site!