Home அரசியல் ஆதார் இருக்க கணக்கெடுப்பு எதற்கு? -  தயாநிதி மாறன் கேள்வி

ஆதார் இருக்க கணக்கெடுப்பு எதற்கு? –  தயாநிதி மாறன் கேள்வி

சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துகின்றீர்கள் என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

பொது மக்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் ஆதாரில் இருக்கும்போது புதிதாக கணக்கெடுப்பு எதற்காக நடத்த வேண்டும் என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துகின்றீர்கள் என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.சிலர்,எங்கள் வாக்குகள் எல்லாம் உங்களுக்கு வேண்டாமா? என்று கேட்கிறார்கள்.நீங்கள் எப்போது எங்களுக்கு வாக்கு அளித்தீர்கள் என்று அவர்களிடம் கேட்கத் தோன்றுகிறது.குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களுக்கு இல்லை, மற்றவாகளுக்கு உண்டு என்பதுதான் தற்போதைய நிலை. 

stalin dmk

தற்போது புதிதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். இதற்காக ரூ.4000 கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு ரூ.12,000 கோடி செலவில் ஆதார் கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஆதார் இருந்தால்தான் ரேஷன் கார்டு,வங்கியில் புதிய கணக்கு உள்ளிட்ட அனைத்தும் தொடங்க முடியும் என்ற நிலையில்,மக்கள் தொகை கணக்கீடு எதற்கு எடுக்க வேண்டும். பழைய காலத்தில் சரியான தகவல் இருக்காது,அதனால் மக்கள் தொகை கணக்கீட்டை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து வந்தார்கள்.தற்போது ஆதாரில் குடிமக்கள் தொடர்பான அனைத்து தகவலையும் வைத்திருக்கும் போது பிறகு ஏன் ரூ.4000 கோடி செலவு செய்ய வேண்டும்.புதிதாக அந்த கணக்கீடு செய்யும் போது 10 கேள்விகளை கேட்க இருக்கிறார்கள்.அதில் நீங்கள் கொண்டாடும் பண்டிகைகள் என்ன என்று கேட்டுள்ளார்கள். அதில் முஸ்லிம் பண்டிகைகள் இல்லை.ஏன் என்றால் ரம்ஜான் உள்ளிட்ட முஸ்லிம்களின் பண்டிகைகளை பிறை பார்த்து வருவதால் நாங்கள் அதில் சேர்க்கவி்ல்லை என்று கூறுகிறார்கள்.இதை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.
அவர்கள் கேட்கும் ஆவணங்களை நம்மால் கொடுக்க முடியாவிட்டால் நம்மிடமிருந்து ஆதார், பாஸ்போர்டை பறிக்க, முடக்க முயல்வார்கள்.அடுத்து அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பார்கள்.அதற்கான முதல் பணியாகவே இதை நாம் கருத வேண்டும்.இல்லை என்றால் கம்ப்யூட்டரில் எல்லா தகவலும் இருக்கும்போது கணக்கீடு செய்ய வேண்டிய அவசியம் எதற்காக வந்தது.இவர்களின் ஆணவப் போக்கு காரணமாகவே தற்போது கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள்...

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான...

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக,...

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக - திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய...
TopTamilNews