Home அரசியல் ஆதரவாளர்களை கைகழுவிய தமிழிசை! பாஜகவில் தலைதூக்கும் கோஷ்டி பூசல்! பொன்னார் சாம்ராஜ்யம்!

ஆதரவாளர்களை கைகழுவிய தமிழிசை! பாஜகவில் தலைதூக்கும் கோஷ்டி பூசல்! பொன்னார் சாம்ராஜ்யம்!

தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற பிரச்சாரம் செய்து வந்த தமிழிசைக்கு தக்க பதவியாக தெலுங்கானாவின் ஆளுநராக நியமித்து பரிசு கொடுத்தது மோடி அரசு. இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசும் நிகழ்ச்சிக்கு கட்டம் கட்டி, தமிழிசையின் ஆதரவாளர்கள் அத்தனைப் பேரையும் நெருங்க விடாமல் செய்து விட்டதாக பாஜக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள்.

தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்று தொண்டை தண்ணீர் வற்ற பிரச்சாரம் செய்து வந்த தமிழிசைக்கு தக்க பதவியாக தெலுங்கானாவின் ஆளுநராக நியமித்து பரிசு கொடுத்தது மோடி அரசு. இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசும் நிகழ்ச்சிக்கு கட்டம் கட்டி, தமிழிசையின் ஆதரவாளர்கள் அத்தனைப் பேரையும் நெருங்க விடாமல் செய்து விட்டதாக பாஜக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள்.

tamilisai

வழக்கமாக மோடி சென்னை வரும் போதெல்ல்லாம் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையின் ஆதரவாளர்கள் அத்தனைப்பேரும் நிகழ்ச்சியில் வலம் வருவார்கள். சமீபத்தில் ஐ.ஐ.டி விழாவில் கலந்து கொள்ள மோடி வந்த போது கூட, தமிழிசை ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. தற்போது தமிழக பாஜகவில் தமிழிசையின் பங்களிப்பு எதுவும் இல்லாததால், அவரது ஆதரவாளர்கள் அத்தனைப் பேரையும் ஓரங்கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கும் இன்னும் யாரும் நியமிக்கப்படாததால், பாஜகவில் இருந்து அந்த பதவிக்கு பல பெயர்கள் அனுப்பி வைத்தும், மேலிடம் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருக்கிறது. இந்நிலையில், மோடியின் வருகையையொட்டி எடப்பாடி குரூப் மட்டுமே அதிகளவில் திட்டங்களைச் செய்து வருவதாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டில் பாஜகவின் பங்கு ரொம்பவும் மோசமாக இருப்பதாகவும் தொண்டர்கள் தெரிவித்தனர். தமிழக பா.ஜ.க-வில் கோஷ்டி பூசல் பூதாகரமாக தற்போது வெடித்துள்ளது. தாங்கள் திட்டமிட்டே நிராகரிக்கப்படுவதாக தமிழிசையிடம் அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தும், ‘பார்க்கலாம்’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, செல்போன் தொடர்பை துண்டித்தாராம் தமிழிசை. இது அவரது ஆதரவாளர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tamiliasi

நயினார் நாகேந்திரன், பி.டி அரசகுமார், எம்.என் ராஜா, வினோத் செல்வம், பிரசாத், சக்ரவர்த்தி, ஜெய்சங்கர், காளிதாஸ் என்று தமிழிசையின் அத்தனை ஆதரவாளர்களுமே இந்த நிகழ்ச்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர் தெலுங்கானாவில் பதவியேற்ற போது, அந்த நிகழ்ச்சிக்கு பாஜகவில் இருந்து யாரெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து, அவர்கள் அத்தனைப் பேருமே பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். எப்படியும் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும். பாஜகவில் ஆட்கள் தேர்தலில் நிற்பதற்கு கிடையாது. தங்களுக்கு தமிழிசை சீட் வாங்கி தருவார் என்று நினைத்து இத்தனை நாட்களாக பணம் செலவழித்து காய் நகர்த்தி வந்தவர்கள் இப்போது விரக்தியில் இருக்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...
Do NOT follow this link or you will be banned from the site!