Home ஆன்மிகம் ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் இரகசியம் என்ன?

ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூறும் இரகசியம் என்ன?

ஆண்,பெண் இருவரும் உறவு கொள்ளும் போது, சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட்டாலே தங்களுக்கு என்ன குழந்தை வேண்டுமோ அதைப் பெற முடியும். இதற்கு நம்முடைய முன்னோர்களும் சித்தர்களுமே சில வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள்.

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என திருமூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

aaanaa

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே (திருமந்திரம் 482)

பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால்,உடலுறவில் ஈடுபட்ட பின்னர் பெண் தனது இடப்பக்கம் சாய்ந்தும், ஆண் குழந்தை வேண்டுமென்றால் வலப்பக்கம் சாய்ந்தும் இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aaangh

ஆண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், சூரியன் சிம்மத்திலும், சந்திரன் கன்னி, விருச்சிகம் அல்லது தனுசுவில்  இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாம் என்றும், பெண் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், சந்திரன் மங்கும் நேரத்திலும், துலாம் அல்லது கும்பத்தில் இருக்கும்போதும்  உடலுறவில் ஈடுபடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண் குழந்தை பிறக்க சித்தர்கள் கூரிய வழிமுறைகளை பற்றி பார்போம்:

1. இரவில் அரை வயிறளவு மட்டும் தான் சாப்பிட வேண்டும். சிறிது பால், 2 பழம் சாப்பிட வேண்டும். இடது கை பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். இரவு முழுக்க  அப்படித் தான் படுத்திருக்க வேண்டும்.

அப்போது வலது புறத்தில் சூரியக்கலை இயங்கிக் கொண்டிருக்கும்.விடியற்காலை 4 மணிக்கு எழுந்து, 5 நிமிடம் தியானம்  செய்துவிட்டு,பெண்ணுடன் உறவு கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள்.

anjnajnj

2. அரைவயிறு சாப்பிட்டுத் தூங்கும் போது,அதிகாலையில் பசி அதிகரிக்கும்.சூரியக்கலையில்  வயிறு பசியாக இருக்கும் போது,உடலுறவு கொள்ள வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். அப்படி செய்தால் நிச்சயம் ஆண் குழந்தை பிறக்குமாம். 

3. ஆண் குழந்தை வேண்டுமென்றால் பெண் மாதவிலக்கான நாளிலிருந்து முறையே, 6,8,10,12, 14, 16, 18 ஆவது நாட்களில் உடலுறவு வைத்துக் கொண்டால், நிச்சயம் ஆண் குழந்தை பிறக்கும் என்கின்றனர் சித்தர்கள்.

ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவி புரியும் ஒருசில உணவுப் பொருட்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. 

ஆண் குழந்தை பிறக்க உதவியாக இருக்கும் அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா:

 

asasdsdj

1. வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அதனை உட்கொண்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

kaalan

2. நல்ல ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். அத்தகைய வைட்டமின் டி மற்றும் பொட்டாசியமான அதிக  அளவில் காளானில் இருப்பதால், இதனை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.

aanaghj

3 .குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து வந்தால், ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.

aaahjj

4.ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும்.எனவே ஜிங்க் நிறைந்த கடல் உணவுகளான கடல் சிப்பியை ஆண்கள் அதிகம் எடுத்து வருவது நல்லது.

asdsdns

5. சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கூட ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும். எனவே கருத்தரிக்கும் முன் சோடியம் நிறைந்த உப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது நன்மை உண்டாகும்.  

asadnan

6. தக்காளியிலும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சரியான அளவில் நிறைந்துள்ளது.மேலும் அத்துடன் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் அவை உடலில் உள்ள pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகள் காவல் நிலையம் வந்து தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்று அவர்களுக்கு உடற்பயிற்சியும் போலீசார் அளி்க்கின்றனர்.

சொன்ன மாதிரி முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க… பா.ஜ.க. கூட்டணியை எச்சரித்த தேஜஸ்வி

பீகாரில், தேர்தலில் வாக்குறுதி அளித்தப்படி, பதவியேற்ற முதல் மாதத்தில் 19 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க. இல்லையென்றால் போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தேஜஸ்வி...

காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு

காங்கிரஸை புதுப்பிக்க முடியாது, காந்திஜி கூட கட்சியை கலைக்க சொன்னார் என்று அந்த கட்சியை நரோட்டம் மிஸ்ரா விமர்சனம் செய்தார். பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த...

திருமணத்தில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கூடினால் விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.25 ஆயிரமாக அம்மாநில அரசு அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவுவதை...
Do NOT follow this link or you will be banned from the site!