Home இந்தியா ஆட்டைய போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருட்டு ராணி -சொந்தவீடும் சொகுசு வாழ்க்கையும்.. 

ஆட்டைய போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த திருட்டு ராணி -சொந்தவீடும் சொகுசு வாழ்க்கையும்.. 

ஷேக் ஒரு பார் பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவர் அன்டோப் ஹில்லில் வசித்து வந்தார். மதுக்கடைகளுக்கு அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, அவர் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார் .. ஆரம்பத்தில், அவர் மற்ற திருடும் பெண்களுடன்   கூட்டு சேர்ந்தார்.

மும்பையில் 53 க்கும் மேற்பட்ட  திருட்டு வழக்குகள் மூலம் ரயில்வே போலீசில் சிக்கியுள்ள ஷேக் என்ற பெண்மணி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததை கண்டு போலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

bar-woman-01

ஷேக் ஒரு பார் பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவர் அன்டோப் ஹில்லில் வசித்து வந்தார். மதுக்கடைகளுக்கு அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, அவர் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார் .. ஆரம்பத்தில், அவர் மற்ற திருடும் பெண்களுடன்   கூட்டு சேர்ந்தார். தன்னை கண்டுபிடிக்காமலிருப்பதற்காக அவர் பர்தா அணிய தொடங்கினார் . இரண்டு முறை திருமணமான ஷேக்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவரது  15 வயது மகள், பஞ்சகனியில் ஒரு பணக்கார பள்ளியில் படித்தார்., 
“ஜனவரி 26 அன்று, ஒரு ஆசிரியர் ரயிலில் போனபோது அவரின் அருகில் ஷேக் பர்தா அணிந்துகொண்டு அவரிடம் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். போலீசாருக்கு இதுபற்றி புகார் வந்து ஸ்டேஷனில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தபோது, ​​திருடன் யார் என்று யூகித்தனர். “ஷேக்கை cctv காட்சிகளிலிருந்து நாங்கள் அடையாளம் கண்டு கைது செய்து ,கோவாண்டியில் உள்ள அவரது தற்போதைய வீட்டிற்கு  அவளை அழைத்துச் சென்றோம். அங்கு  சுமார் 5.5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது, ”என்று மூத்த ஆய்வாளர் ராஜேந்திர பால் கூறினார்.

woman-arrested

அங்கு  ஷேக் மேலும் திருடப்பட்ட பொருட்களை  மறைத்து வைத்திருப்பதாகவும் காவல்துறையினர் நம்பியதையடுத்து, ஒரு ஜிஆர்பி குழு அவரது இல்லத்த்தில் தேடியபோது  “தங்க ஆபரணங்கள் ,செல் போன்கள் மற்றும்  பெட்டிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதை நாங்கள் கண்டோம்,” என்று பால் கூறினார்.  திருடப்பட்ட அனைத்து பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ .8 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது . கோவண்டியில் வீடு வாங்க  ஷேக் ரூ .16 லட்சம் செலுத்தியுள்ளார் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது, 
அவரது வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போதெல்லாம், நீதிமன்றத்தில் அனுதாபம் பெற ஒரு குழந்தையை நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு அவர் தனது குடும்பத்தினருக்கு அறிவுறுத்துகிறார் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் ரயில்வே வளாகத்திற்கு வெளியே, தாராவி மற்றும் குர்லா ஆகிய இடங்களில் திருட்டுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ரஜினியின் அரசியல் பிரவேசம் : பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணியை ஆரம்பம்!

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை நடிகர் ரஜினிகாந்த் துரிதப்படுத்தியுள்ளார். மீதமுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்...

ஜடேஜாவுக்குப் பதில் சஹலை இறக்கியது சரிதானா – வலுக்கும் சர்ச்சை #IndVsAus

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் மூன்றில் இரண்டு போட்டிகளில் தோற்று தொடரை இழந்தது இந்தியா. இந்நிலையில் டி20 போட்டித்...

‘பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள்’ வேளாண் சட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்த 'டெல்லி சலோ' போராட்டம் நாளுக்கு நாள் வலுபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய போராட்டம், தற்போது வரை நிறைவு பெற்றதாக இல்லை....

தலைவிக்காக சூப்பர்மேனாக மாறிய விஜய் #AMMA #Thalaivi

அரசியலில் தனி முத்திரை பதித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று. சென்னை அப்பல்லோவில் 74 நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனின்றி...
Do NOT follow this link or you will be banned from the site!