Home அரசியல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல; காலத்தின் கட்டாயம் - கமல் பேச்சு

ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல; காலத்தின் கட்டாயம் – கமல் பேச்சு

குறிப்பிட்ட 35 பேரை மட்டுமே அழைத்து மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை முடித்திருக்கிறார் கமல்.

’’நான் பெருங்கோபத்துடன் வந்துள்ளேன். நேர்மையுடன் நாம் இருந்தால் நமது குறிக்கோளை எளிதாக அடையலாம். நாமது நேரடி போட்டி ஊழலுடன் தான். நாம் தான் தமிழகத்தின் பாதுகாப்புப் படை. வெற்றி நமதே! தலைநிமிரட்டும் தமிழகம்.’’என்று செயற்குழுவில் கமல் சொன்னதாக சொல்கிறார் ம.நீ.மய்யம் மகேந்திரன்.

மக்கள் நீதி மய்யம் வருகின்ற தேர்தலில் வென்று, தான் முதல்வர் ஆகிவிடுவார் என்றே பேசியிருக்கிறார் கமல். நமக்கு நேரடி போட்டி ஊழலோடுதான். திமுக, அதிமுகவோடு போட்டி என்பதை விட ஊழலுடன் நேரடிப்போட்டி என்பதை நோக்கில் பயணிப்போம். 1967 ல் அண்ணாவின் திமுக ஆட்சியை பிடிப்பது என்பது எப்படி காலத்தின் கட்டாயமானதோ அதேபோல் இப்போது திமுக, அதிமுகவுக்கு என்ற கொள்ளைக் கூட்டங்களுக்கு எதிராக நாம் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது, நம் விருப்பம் அல்ல; இது காலத்தின் கட்டாயம் என்று பேசியதாக ம.நீ.ம. வட்டாரம் சொல்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மீண்டும் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்…. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவதற்காக காத்திருக்கும் சோனியா காந்தி…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு மறுசீரமைப்பை சோனியா காந்தி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில்...

நாட்டின் விவசாயிகளின் விருப்பத்தை குடியரசு தலைவரால் நிராகரிக்க முடியாது… பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை தனது மாநிலத்தில் அமல்படுத்துவதை...

என்கவுண்டரில் 127 பேர் அவுட்… குற்றம் மற்றும் குற்றவாளிகளை அரசு சகித்து கொள்ளாது.. யோகி ஆதித்யநாத்

அரசாங்கம் குற்றம் மற்றும் குற்றவாளிகளை சகித்து கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 1959ம் ஆண்டில் லடாக்கின் ஹாட்...

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடத்தும் ஒரு குழு சாமி சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!