ஆட்சியில் 4ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் முதல்வரின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகள் : அமைச்சர் வேலுமணி

அவரின் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி  எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 136 எம்.எல்.ஏக்களுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டு, அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போதில் இருந்தே அதிமுகவில் குழப்பம் ஆரம்பித்து விட்டது. அவரின் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி  எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், டிடிவி தினகரன் பிரிந்து சென்று வேறு கட்சி தொடங்கியதால் அதிமுகவில் பல குழப்பங்கள் நீடித்தது. 

ttn

எடப்பாடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், எம்.எல்.ஏக்களின் பலம் குறைந்து கொண்டே வந்தது. அதிமுக அரசு மைனாரிட்டி அரசு என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் ஆட்சி இடைத்தேர்தல் நடக்கும் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இது எல்லாம் ஒரு புறம் இருக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியைத் திறம்பட நடத்தினார். ஆண்டாண்டு காலமாக மக்கள் வைத்து வந்த கோரிக்கைகள் இவரின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, 37 மாவட்டங்கள், 9 புதிய மருத்துவக் கல்லூரிகள், வெளிநாடு சுற்றுப்பயணத்தின் மூலம் முதலீடு ஈர்ப்பு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட பல எனப் பல திட்டங்களை நிறைவேற்றினார்.

ttn

3 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சியைத் திறம்பட நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் வேலுமணி முதல்வருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை, மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்து, 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் சரித்திர சாதனைப் பயணம் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...