Home சினிமா ஆடை படம் பார்த்தால் அமலா பாலை நேரில் சந்திக்கலாமா?  

ஆடை படம் பார்த்தால் அமலா பாலை நேரில் சந்திக்கலாமா?  

அமலா பால் ஆடை பட விமர்சனம் கேட்க திரையரங்கிற்கு நேரடியாகச் சென்றுள்ளார். 

சென்னை: அமலா பால் ஆடை பட விமர்சனம் கேட்க திரையரங்கிற்கு நேரடியாகச் சென்றுள்ளார். 

மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ள படம் ஆடை. கடும் சர்ச்சைக்கு இடையே கடந்த வாரம் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதில்  அமலா பாலின் துணிச்சலான நடிப்பை ரசிகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் நடித்தவர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்ப்பது தான் வழக்கம். ஆனால் ஆடை பட குழு சற்று வித்தியாசமாக செயல்பட்டுள்ளது. ஆம்.. அமலா பால் மற்றும் படக்குழு இணைந்து மீடியா ஆட்களைப் போல், கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு, அனைவரிடமும் கருத்துக் கேட்டுள்ளனர். அமலா பால் தலையில் தொப்பியும், கண்ணில் கண்ணாடியும் அணிந்திருந்ததால், ரசிகர்களால் அவரை சரியாக அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. 

பிறகு அமலா பாலே தனது தொப்பியைக் கழட்டி வைத்து விட்டு ரசிகர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக உரையாடியுள்ளார். அந்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

முன்னாள் ராணுவ வீரரின் மகனை கொன்று, இருசக்கர வாகனம் கொள்ளை

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் மகனை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்....

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு: உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர்...

கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி!

கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள்...
Do NOT follow this link or you will be banned from the site!