ஆடு மேய்க்கச் சென்ற பெண் : சரமாரியாக வெட்டி படுகொலை.. அதிர்ச்சியில் கிராம மக்கள் !

கிராம மக்களுடன் காட்டுப்பகுதிக்குச் சென்ற முருகேசன் அங்குப் பெய்த மழைநீரில் ரத்த வெள்ளமாகப் போவதைக் கண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தேனிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரின் மனைவி பானுமதி. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல பானுமதி தென்னதிரையன்பட்டி ஆர்.எஸ்.பதி என்னும் காட்டுப்பகுதிக்கு நேற்று ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

tn

வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது கணவர் அதிர்ச்சியில் இருந்துள்ளார். அதன் பின்னர், அவர் அழைத்துச் சென்ற ஆடுகள் மட்டும் வீடு திரும்பியுள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த முருகேசன் அப்பகுதி மக்களிடம் பானுமதி வீடுதிரும்பாததைப் பற்றிக் கூறியுள்ளார். 

ttn

அதன் பின்னர், கிராம மக்களுடன் காட்டுப்பகுதிக்குச் சென்ற முருகேசன் அங்குப் பெய்த மழைநீரில் ரத்த வெள்ளமாகப் போவதைக் கண்டுள்ளார். சிறிது தூரம்  சென்று பார்த்ததில் அங்கு பானுமதி சரமாரியாக வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். மழையில் வெள்ளமாகச் சென்ற பானுமதியின் ரத்தத்தைப் பார்த்து முருகேசனும், கிராம மக்களும் கதறியழுதுள்ளனர்.

ttn

இது குறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கே செருப்பு, தொப்பி உள்ளிட்ட பொருட்கள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, பானுமதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்க்கச் சென்ற பெண், சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...