Home ஆன்மிகம் ஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா?

ஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா?

ஆடி மாசத்துல நல்ல விஷயம் எதுவுமே செய்யக் கூடாதென்கிற மூட நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

ஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா?

ஆடி மாசத்துல நல்ல விஷயம் எதுவுமே செய்யக் கூடாதென்கிற மூட நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. வருஷத்தின் அனைத்து மாதங்களுமே வழிபாட்டிற்கு உரிய மாதங்கள் தான் என்றாலும், இந்த ஆடி மாதத்தை அம்மனின் மாதமாக கொண்டாடுகிறோம். 

god

ஆடி மாதம் தனி சிறப்பு பெற்ற மாதமாக இருப்பதால் தான் அம்மனுக்கு உகந்த மாதமாக மனசில் நிற்கிறது.

ஆடி மாதத்தை பீடை மாதம் என்றும் சிலர் அழைக்கின்றனர். அது அப்படியல்ல. உண்மையில் பீடு மாதம் அதாவது பீடு என்றால் பெருமை உடைய என்று அர்த்தம். அதனாலேயே அதை ஆன்மிக மாதமாக கொண்டாடுகிறோம்.  ஆடி மாதத்தில் தான் பருவநிலை மாறுதல் அடைந்து புதியதாக காற்றும், மழையும் ஆரம்பமாகிறது. காற்றில் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும் மாதமும் ஆடி மாதம் தான். இதனால் தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதைக்கும் பருவமாக கொண்டாடுகிறோம். ஆடியில் விதைத்தால், தை மாதத்தில்  அறுவடை செய்யலாம். தை மாதம் அறுவடை செய்து புது பொங்கல் பொங்குவதற்கான உழைப்பின் ஆரம்பம் தான் ஆடி மாதம். 

god

மேலும், பருவநிலை மாறுவதால் தொற்று நோய்கள், உடல் ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட வாய்ப்பு அதிகம். அம்மன் கோவில்கள் வேப்பிலையும், எலுமிச்சையும் வைத்து வழிபாடு செய்வர். வேம்பு, எலுமிச்சை இரண்டுமே கிருமி நாசினி. கூழ் வார்க்கும் வழக்கமும் ஆடிமாதத்தில் தான். செரிப்பதற்கு எளிய உணவு பொருளாகவும், குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் உணவாகவும் கூழ், நம் உடல் நலத்தை சீராக்குகிறது.
சிறப்புகள்

அதிர்ஷ்டம் இல்லாததாகவும், நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்புடையதாக இல்லாததாகவும் கருதப் படுகிற ஆடி மாதத்தில் தான் ஆண்டாள் அவதரித்தார். அவர் அவதரித்த பூரம் நட்சத்திரத்தைத் தான் ‘ஆடிப் பூரம்’ என்று கொண்டாடுகிறோம். விவசாயம் செழித்தோங்க காவிரி தாய்க்கு ஆடிப்பெருக்கு விழா எடுக்கிறோம். கருடாழ்வார் அவதரித்ததும் இப்படி பெருமைகள் வாய்ந்த ஒரு ஆடி மாதத்தின் பஞ்சமியில் தான். அதைத் தான் ‘கருட பஞ்சமி’ என்று கொண்டாடுகிறோம். சிவபெருமானின் இடது பாகத்தை விஷ்ணு ஏற்று சங்கர நாராயணராக காட்சியளித்த ஆடி தபசு இந்த மாதத்தில் தானே கொண்டாடப்படுகிறது. கஜேந்திர மோட்சம் கிடைத்த மாதமும் ஆடி மாதம் தான்.

god

உங்கள் குழந்தைகளின் கல்வி மேம்படுவதற்காக ஹயக்கிரீவருக்கு அர்ச்சனை செய்து,சுலோகம் சொல்லி வழிபடுகிறீர்களே… அந்த கல்வி கடவுளான ஹயக்கிரீவர் அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான். வியாச வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக ஆடி பௌர்ணமி இருக்கிறது. இறந்த நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்கு சூரியன் திசைதிரும்பும் இந்த ஆடி மாதத்தின் அமாவாசை நாள் தான், 
உகந்த நாளாக இருக்கிறது. அடுத்த முறை யாராவது உங்களிடம் ஆடி மாசம் வேண்டாமே’ என்றால் மறக்காமல் இதன் பெருமையை எடுத்துச் சொல்லுங்கள்.

ஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா?

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ‘வீட்டுமனை’ இலவசம்; வட்டாட்சியரின் அசத்தல் அறிவிப்பு!

பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுமென வட்டாட்சியர் அறிவிப்பது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்...

தமிழர்களின் வீர விளையாட்டு; சிலம்பத்திற்கு ஒன்றிய அரசு அங்கீகாரம்!

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் இணைக்கப்பட்டு இருப்பதாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9...

2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்; 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு!

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 20 ஆயிரம் முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா...
TopTamilNews