Home ஆன்மிகம் ஆடிப்பெருக்கு அன்று யாரை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும்?

ஆடிப்பெருக்கு அன்று யாரை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும்?

நாளை சனிக்கிழமை (3-8-19) அன்று அடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத் தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தின் 18வது நாளைத் தான் ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறோம். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல இந்நாளில் நம் வாழ்வில் நாம் செய்ய ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் பெருகும் என்பது காலம் காலமாக நம்மிடையே உள்ள நம்பிக்கை. அம்பிகை உமாதேவியும் உலகை ரட்சிக்க மகா சக்தியாக உதித்த நாளாகவும் ஆடிப்பூரத்தைத் தான் சொல்கிறோம்.

ஆடிப்பெருக்கு அன்று யாரை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும்?

நாளை சனிக்கிழமை (3-8-19) அன்று அடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத் தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தின் 18வது நாளைத் தான் ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறோம். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல இந்நாளில் நம் வாழ்வில் நாம் செய்ய ஆரம்பிக்கும் அனைத்து செயல்களும் பெருகும் என்பது காலம் காலமாக நம்மிடையே உள்ள நம்பிக்கை. அம்பிகை உமாதேவியும் உலகை ரட்சிக்க மகா சக்தியாக உதித்த நாளாகவும் ஆடிப்பூரத்தைத் தான் சொல்கிறோம். யோகிகளும், சித்தர்களும் தங்கள் தவத்தை இந்த நாளில் துவக்குகின்றனர். புதிய காரியங்களைச் செய்வதற்கு அத்தனை உகந்த நாள் ஆடிப்பெருக்கு. 
நாளைய நல்ல நேரம்  காலை 7.45 மணி முதல் 8.45 வரை. பிறகு மாலை 3.15 மணிக்குத் துவங்கி 4.15 வரையில். 

aadi

கௌரி நல்ல நேரம் பகல் 10.45 மணி முதல் 11.45 வரை. இரவு 9.30 மணி முதல் 10.30 வரை. இந்த நல்ல நேரத்தில் உங்களின் புது முயற்சியை விநாயகரை வழிப்பட்டு, பின் உங்கள் குல தெய்வத்தை மனதில் இறுத்தி, இஷ்ட தெய்வத்தையும் வழிபடுங்கள். கூடவே, காவிரி அன்னையை மனதில் நினைத்து, செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றி கிட்ட வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். 
நாளை  சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பமாகிறது. தங்கச் சப்பரத்தில் அம்மன் பவனி வருவதைப் பார்ப்பதற்கு கண் கோடி வேண்டும். அங்கமங்கலம் அன்னபூரணி அம்பாள் ஆலயத்தில் வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா வருவார்கள். ராமேஸ்வரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் காலையில் பல்லக்கில் பவனி வருகிறாள். 

god

ஆடிப்பெருக்கு தினத்தில் காவல் தெய்வங்களை வழிபட்டு வந்தால், உங்கள் கஷ்டங்கள் யாவும் பனித்துளி போல விலகிச் செல்லும்.
ஆடி பதினெட்டு விதை விதைப்பதற்கு மிகவும் உகந்த நாள். அட்சய திருதியை விட தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கு மிகச் சிறப்பான நாள் ஆடிப் பெருக்கு தான்.

ஆடிப்பெருக்கு அன்று யாரை வழிபட்டால் கஷ்டங்கள் விலகும்?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

39 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உள், மதுவிலக்கு மற்றும்...

“எனக்கு கொஞ்சம் மெமரி லாஸ் ஆயிடுச்சி” – காயமடைந்த டு பிளெஸிஸ் ஷாக் தகவல்!

ஏப்ரல் மாதம் ஐபிஎல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிளெஸிஸ் சொந்த நாடு திரும்பினார். இதற்குப் பிறகு அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (Pakistan Super League)...

புதுச்சேரியில் முதல் முறையாக அரியணை ஏறும் பாஜக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் பரபரப்பு புகார்!

போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி சிலர் தனது பெயரில் அவதூறு பரப்பி வருவதாக நடிகர் செந்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நகைச்சுவை...
- Advertisment -
TopTamilNews