ஆச்சியை அடுத்து பிரபல சாம்பார் பொடிக்கு செக்… பாக்டீரியா இருப்பதாக கண்டுபிடிப்பு!  

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH சாம்பார் மசாலாவில் வயிற்றுபோக்கை ஏற்படுத்தும் சல்மோனெல்லா பாக்டீரியா இருந்தது அந்நாட்டு உணவுத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

MDH என்ற நிறுவனம் மிளகாய்தூள் , சாம்பார் பொடி உள்ளிட்ட பல்வேறு மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சாம்பார் மசாலா பொடியில் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரோலினா மாகாணத்திலுள்ள கடைகளில் சோதனை நடத்திய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சாம்பார் மசாவில்  உணவை விஷமாக மாற்றும் தன்மை கொண்ட சல்மோனல்லா பாக்டீரியா இருப்பதை கண்டறிந்தனர்.  

MDH

இந்த பாக்டீரியா உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து,காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து MDH மசாலா பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. MDH சாம்பார் மசாலாக்கள் இந்தியாவிலும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...