Home குற்றம் உள்ளூர் 'ஆசிர்வாதம் செய் ஆயா ஆயிரம் ரூபாய்' என ஆட்டையை போட்ட ஆட்டோ டிரைவர்!

‘ஆசிர்வாதம் செய் ஆயா ஆயிரம் ரூபாய்’ என ஆட்டையை போட்ட ஆட்டோ டிரைவர்!

‘ஆப்பரேஷன் ஆயா’ என்ற பெயரில் சுந்தர் நடத்திய கோல்மால் என்னவென்று கேளுங்கள். சாலைகளில் பேருந்துக்காக காத்திருக்கும் ஆயாக்களுக்கு ஸ்கெட்ச் போடுவார்.

சென்னை, செம்மஞ்சேரி, நீலாங்கரை, திருவான்மியூர் பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு வித்தியாசமான புகார்கள் அடிக்கடி வந்தன. புகார்தாரர்கள் எல்லாரும் வயதான பாட்டிமார்கள். தங்களை ஒரு ஆட்டோடிரைவர் மிரட்டி நகைகளை பறித்துக்கொண்டதாக எல்லா பாட்டிமார்களும் ஒரே மாதிரியான புகார் வாசித்தார்கள். உஷாரான போலீசார், சம்பந்தப்பட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சுந்தர் என்ற ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்திருக்கிறார்கள். விசாரணையில் தெரியவந்தது பகீர் ரகம்.

Sundar

அதாவது, சுந்தரின் டகால்டி வேலையில் ஒரு நவீனத்துவம் இருந்தது. ‘ஆப்பரேஷன் ஆயா’ என்ற பெயரில் சுந்தர் நடத்திய கோல்மால் என்னவென்று கேளுங்கள். சாலைகளில் பேருந்துக்காக காத்திருக்கும் ஆயாக்களுக்கு ஸ்கெட்ச் போடுவார். “நான் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுகிறேன் ஆயா, காசெல்லாம் வேண்டாம்” என நைச்சியமாக சொல்ல, ஆஹா, பேருந்து இடிபாடுகளில் சிக்காமல் வீட்டுக்கு போய்விடலாம் என நினைக்கும் ஆயாக்கள் ஆட்டோவில் ஏறுவார்கள். ஆட்டோவில் ஏறியதும், ஆயா உன்னைப்பாத்தா மஹாலஷ்மி மாதிரி இருக்கே, எனக்கு தெரிஞ்ச ஒரு பணக்காரர் புதுசா வீடு கட்டியிருக்கார், பெரியவங்க அவருக்கு ஆசிர்வாதம் பண்ணினா ஆயிரம் ரூபா தருவார், அழைச்சுட்டுப் போறேன் வர்றீங்களா என கேட்பார். ஆயாக்களும் ஆசைப்பட்டு ஓக்கே சொல்வார்கள். ஆள் அரவமற்று இருக்கும் இடமாக சென்று, ஆயாவை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகையை அபேஸ் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார் சுந்தர். அடப்பாவி, எவ்வளவு நாளா ரூம் போட்டு இந்த ஐடியாவை கண்டுபிடிச்சானோ தெரியலை. இப்போது காவல்துறையினர் காசே வாங்காமல் சுந்தருக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டிருப்பதாக செய்தி.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

41 இடங்களை கொடுக்கங்கள்! இல்லையெனில் கொடுக்கும் இடத்தில் கூட்டணி- தேமுதிக

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் கேட்க உள்ளோம் என தேமுதிக கழக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு...

“சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது”

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு...

சசிகலா உடல்நிலை கோளாறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சீமான்

சசிகலா உடல் நலம் பெற்று வெளியே வரவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டல தேர்தல்...

எடப்பாடி அரசின் சாதனைகளை அண்ணாந்து பார்க்கும் அண்டை மாநிலங்கள்!

மருத்துவம், கல்வி, தொழில் துறை, நீர் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளில், பிற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி...
Do NOT follow this link or you will be banned from the site!