அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியின் பொதுக்கூட்டம்: தே.மு.தி.க பங்கேற்குமா? 

அதிமுக – பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

admk bjp ttn

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘ தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வருவது தமிழக மக்களுக்குச் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதைப் போல உள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரதமர் எப்போது வந்தாலும் மத்திய அரசின் பல கோடி ரூபாய் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். தி.மு.க.வினர் பதவி சுகத்தை மட்டும் அனுபவித்தவர்கள். நாட்டை கொள்ளை அடித்தவர்கள். தி.மு.க.வோடு சேர்ந்துள்ள நால்வர் அணி தே.மு.தி.க.வோடு கூட்டணியிலிருந்தபோது என்ன நிகழ்ந்தது என்று 2016 தேர்தலிலே பார்த்தோம்’ என்றார். 

இதைத் தொடர்ந்து தே.மு.தி.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, தே.மு.தி.க.தான் முடிவெடுக்க வேண்டும். தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதை அ.தி.மு.க தான் கூற வேண்டும்’ என்று கூறினார்.

Most Popular

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை! – ராணுவ மருத்துவமனை அறிவிப்பு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில்...

கையில் ஈரம்… ஃபேன் சுவிட்ச் போட்ட சிறுவன்… மயங்கிய நிலையில் பறிபோன உயிர்!- சென்னையில் நடந்த சோகம்

ஈர கையுடன் ஃபேன் சுவிட்ச்சை போட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தஷ்ணாமூர்த்தி என்பவர் அப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன்...

“மாஸ்க் போட்டா மேக் அப் போட்டது தெரியாதே ” கிரிக்கெட் பிளேயர் ஜடேஜாவின் மனைவி- மாஸ்க் போட சொன்ன போலீசிடம் வாக்குவாதம் .

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜா தன்னுடைய மனைவி ரிவாபாவுடன் கடந்த திங்கள்கிழமை இரவு தன்னுடைய நண்பரை பார்த்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார் .அப்போது ஜடேஜா மட்டுமே முகத்தில் மாஸ்க்...

“உதயநிதி ஸ்டாலினின் பரம்பரையே பிளேபாய் தான்” : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், 'உதயநிதி ஸ்டாலினால் செல்வம் ஏமாந்து விட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் செல்வத்திற்கு சாக்லேட்...
Do NOT follow this link or you will be banned from the site!