Home தமிழகம் அவமானத்தில் பெண் தற்கொலை; வங்கி ஊழியர்கள் அராஜகம்!

அவமானத்தில் பெண் தற்கொலை; வங்கி ஊழியர்கள் அராஜகம்!

ஒவ்வொரு மாத நிலுவை தொகையையும்ம் சரியாக செலுத்தி வந்த லலிதா, கடைசி மாத நிலுவை தொகையை செலுத்த தாமதமானதாக கூறப்படுகிறது

நாகப்பட்டினம்: வங்கி ஊழியர்கள் செல்போனில் படம் பிடித்ததால் அவமானம் தாங்காமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி லலிதா லட்சுமி (28). கொத்தனாராக வேலை செய்து வரும் சுரேஷுக்கும் லலிதாவுக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்த லலிதா லட்சுமி, மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஒவ்வொரு மாத நிலுவை தொகையையும் சரியாக செலுத்தி வந்த லலிதா, கடைசி மாத நிலுவை தொகையை செலுத்த தாமதமானதாக கூறப்படுகிறது. தனது கணவருக்கு சரிவர வேலை கிடைக்காததால், குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் கடைசி மாத நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை என தெரிகிறது.

woman suicide

இந்நிலையில், அவரது வீட்டுக்கு சென்ற வங்கி ஊழியர்கள் சிலர் லலிதாவை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். அத்துடன், அவரை செல்போனில் படம் எடுத்துள்ளனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொண்டதால் அவமானம் தாங்க முடியாமல், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லலிதா திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

nirav, mallya

பெரு முதலளிகள் எல்லாம் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணத்தை கடனாக பெற்று விட்டு, உள்நாடுகளிலும், நாட்டை விட்டு தப்பி வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சிறு தொகைகளை கடனாக பெற்ற சாமானிய மனிதர்களை வங்கிகளின் கடன் வசூல் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: தி.மு.க. செயற்குழு உறுப்பினர் கைது; அ.தி.மு.க.வின் சதிசெயலா?

மாவட்ட செய்திகள்

Most Popular

மனுதர்மத்தில் அப்படி என்னதான் இருக்கு?

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...

கற்பூர ஆரத்தி எடுக்கும் போது இதை செய்ய மறக்காதீங்க!

'ஆ' என்பது முழுமை என அர்த்தம் ஆகும். 'ரதி' என்பது காதல் அல்லது அன்பு என அர்த்தம் ஆகும்.

நான் நாட்டின் பிரதமரானால் இதை தான் முதலில் செய்வேன் – திருமா

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு...

நவராத்திரி கொலு – ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து பகுதியில் நவராத்திரி விழாவின் 9ஆம் நாளையொட்டி, இன்று கொலுவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!