அறுபது வருடமாக அதே மெனு! அசத்தும் மரப்பாலம் முதலியார் மெஸ்!

நாலே நாலு டிஷ்- இட்லி,தோசை, இவற்றுக்கு தொட்டுக்கொள்ள,பிச்சுப்போட்ட கோழி,சிக்கன் கொத்துக் கறி இவளவுதான்!அறுபது வருடமாக சளைக்காமல் வந்துகொண்டு இருக்கிறது சுவைதேடிகள் கூட்டம்.

food

சிறிய கடைதான்,உரிமையாளரே மாஸ்ட்டர்,அவருடைய தாத்தாகாலத்தில் கடை துவங்கிய போதும் அப்படித்தானாம்.அவரைத்தவிர பரிமார இன்னும் இரண்டுபேர்தான் இருக்கிறார்கள்.சூடான,இட்லியை ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கூடவே ஒரு சிக்கன் குருமா ஊற்றப்படுகிறது. தோசை கேட்டால்,கையகலத்துக்கு மெத்து மெத்தென்று ஊற்றி பொன்னிறமாக வேக வைத்து எடுத்துத் தருகிறார்கள்.

உங்களுக்கு தேவைப்பட்டால் பிச்சுப்போட்ட கோழிக்கறியோ வாங்கிக் கொள்ளலாம்.கோழிகளை சுத்தம் செய்து அவரே கைபடச் செய்த மசாலா சேர்த்து வேகவைத்து தயாராக வைத்திருக்கிறார்.

food

நீங்கள் பிச்சுப் போட்ட கோழி கேட்டால்,கோழியில் ஒரு பெரிய பாகத்தை பிய்த்து எடுத்து,அதை தோசைக்கல்லில் உதிர்த்து கூடவே கொஞ்சம் பொடியாக வெட்டப்பட்ட வெங்காயமும் மிளகுத்தூளும் சேர்த்து,நல்லெண்ணெய் விட்டு வதக்கி கொஞ்சம் டிரையாகத் தருகிறார்கள்.

food

கொத்துக்கறி கேட்டால்,இதே போல மசால் சேர்த்து வேகவைத்த கோழியை எடுத்து தோசைக்கல்லின் மேல் போட்டு,தோசைக் கரண்டியால் கொத்தி சிறு துண்டுகளாக்கி,அத்துடன் சிறிது வெங்காய்ம் சேர்த்து சற்று நேரம் புரட்டி,அத்துடம் சிக்கன் குருமாவை ஒரு கரண்டி ஊற்றி,மேலும் ஒரு நிமிடம் புரட்டி அதை ஒரு தட்டில் வழித்துப் போட்டு,உங்கள் மேஜைக்கு அனுப்பி வைக்கிறார் அவளவுதான்.

food

அனேகமாக இத்தனை எளிமையான வேறு உணவகமேதும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை.ஆனாலும்,மரப்பாலம் முதலியார் மெஸ் என்றால்,தெரியாதவர்கள் யாருமில்லை ஈரோட்டில்.ஒரு அவித்த முட்டை,ஆம்லெட்,ஆஃப்பாயில் கூட இல்லாத இந்த அதிசய உணவகத்தில் கூட்டத்துக்கும் குறைச்சலில்லை.நல்ல சுவையும் தரமுமே இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் காரணிகள்!.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...