Home சினிமா அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் மோஷன் போஸ்டர்

அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் மோஷன் போஸ்டர்

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ’K13’ திரில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் மோஷன் போஸ்டர்

சென்னை: அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ’K13’ திரில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

ஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி ‘கதைகளின்’ நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார். தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களில் நடிக்கும் அவரது ஆர்வம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே அவருக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக, அவரது அடுத்த படமான ‘K13’ படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புகளை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் உடனடியாக அனைவரையும் கவர்ந்து, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

அருள்நிதியின் திரை பிரசன்னத்திற்கு சமமாக, ‘வீடு’ ஒன்றும் மோஷன் போஸ்டரில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது, இதற்கு முன்னர் வந்த போஸ்டர்களிலும் அது நிகழ்ந்தது. இதில் மொபைல், கதாபாத்திரங்களை தாங்கிய காகிதங்கள் அல்லது பச்சை நிற சுவர்கள், புகை, துப்பாக்கி சூடு மற்றும் ஒவ்வொரு விஷயமும் ஆழமாக சில விஷயங்களை பதிவு செய்கின்றன. 

இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது, “இந்த படத்தில் “K 13” என்பது குறிப்பது போல வீடு ஒன்று முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது. ரசிகர்கள் அதோடு ஒன்றிப்போக நாங்கள் தயார் செய்ய வேண்டியிருந்தது. இந்த மோஷன் போஸ்டருக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் அதற்கு தேவையான தீவிரத்தை கொடுத்த ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார், இசையமைப்பாளர் தர்புகா சிவா ஆகியோருக்கு தான் போய் சேரும்.

மேலும், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், எடிட்டர் ரூபன் மற்றும் சண்டைப்பயிற்சியாளர் டி. சுதேஷ் ஆகியோர் படத்தில் அதிக ஊக்கத்தை தந்திருக்கிறார்கள்.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள K13 திரில்லர் படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருக்கிறார்கள்.

அருள்நிதி நடிக்கும் ‘கே 13’ படத்தின் மோஷன் போஸ்டர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“27% இடஒதுக்கீடு வரலாற்று சிறப்புமிக்க முடிவு… சமூக நீதிக்கு முன்னுதாரணம்” – பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50%...

“ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள்”… ஆய்வு பணி நடைபெறுவதாக அமைச்சர் முத்துசாமி தகவல்!

ஈரோடு ஈரோட்டில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் உள்பட 82 புதிய திட்டங்கள் செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வீட்டு வசதித்...

பிளஸ்-2 மாணவிக்கு அடிக்கடி ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது

பிளஸ்- 2 மாணவிக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” – வழக்கம்போல அட்டென்டன்ஸ் போட்ட அன்புமணி!

தமிழ்நாட்டில் எந்த அறிவிப்பும் வந்தாலும், “அன்றே அறிக்கை விடுத்தேன்; இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி” என்று அறிக்கைக்கு ஒரு அறிக்கை விடுவார்கள் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி...
- Advertisment -
TopTamilNews