அரிசி ராஜா பிடிபட்டான்… மயக்க ஊசி செலுத்தி சுற்றிவளைத்த வனத்துறையினர்!

பாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே இந்த முயற்சியில் கலீம் களமிறக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரி பாளையத்தில் சுற்றித் திரிந்து வந்தது  அரிசி ராஜா காட்டு யானை. இந்த யானை ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதோடு, அரிசியையும் விரும்பி சாப்பிடுமாம். இதனால்  இதை அரிசி ராஜா என்று அழைக்கின்றனர்.  2017 ஆம் ஆண்டு கோவை வெள்ளூரில் 4 பேரை மிதித்துக் கொன்றதாகவும், நவமலை காட்டுப்பகுதியில் 3 பேரை மிதித்துக் கொன்றதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது  அர்த்தநாரி பாளையத்தில்  சுற்றி திரியும் இந்த காட்டு  யானை சமீபத்தில் விவசாயி ஒருவரைத் தாக்கி கொன்றதால் அச்சம் அடைந்த கிராம மக்கள் வனத்துறையினர் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். 

arisi raja

அரிசி ராஜாவைப் பிடிக்க கலீம் மற்றும் பாரி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் பாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே இந்த முயற்சியில் கலீம் களமிறக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் 70க்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டு ட்ரோன்  மூலம் அரிசி ராஜாவைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

elephant

இந்நிலையில் அரிசி ராஜாவை  நேற்று இரவு ஆண்டியூர் பகுதி தென்னந்தோப்புக்குள் வேட்டை தடுப்பு காவலர்கள் சுற்றிவளைத்தனர். இதன் பின்னர் மருத்துவக்குழுவின்  உதவியுடன் அரிசி ராஜாவுக்கு இரவு 9.45 மணியளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மேலும் மீண்டும் அதிகாலை 3 மணிக்கு மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு கும்கி யானை கலீம் உதவியுடன்,  அரிசி ராஜாவை லாரியில் ஏற்றும் பணிகள் தொடங்கியது. அங்கிருந்து காட்டு யானை அரிசி ராஜா டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Most Popular

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கானா காது கிராமத்தில் இக்பால் என்ற நபர் தன்னுடைய 80 வயதான பக்கவாதம் பாதிக்கப்பட்ட தாயோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரால் அவரின் தாயை பராமரிப்பது அவருக்கு...

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்...

மும்பை செல்லவிருந்த ஏர்ஆசியா விமான விபத்து தவிர்ப்பு !

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 35 அடி கீழே ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்த சம்பவம் நாடு...

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை! போலீஸ் ரெய்டில் சிக்கிய பெண்

ஸ்விக்கி ஃபுட் டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (32). இவர் கார் டிரைவராகவும் ஸ்விகி ஃபுட் டெலிவரி செய்யும் வேலையும்...