Home தமிழகம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணம் அதிரடி குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணம் அதிரடி குறைப்பு: பயணிகள் மகிழ்ச்சி

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் குளிர்சாதன படுக்கை வசதி பஸ்கள், கிளாசிக், சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும் குளிர்சாதன படுக்கை வசதி பஸ்கள், கிளாசிக், சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட 60 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதில், குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகளுக்கு கி.மீ.,க்கு, ரூ.2. 25 பைசா சாதாரண படுக்கை பேருந்துகளுக்கு ரூ.1.55 பைசா, கழிப்பிட வசதியுடன் கூடிய கிளாசிக் பேருந்துகளுக்கு ரூ.1.15 பைசா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ்களின் கட்டணத்தை விட கூடுதலாக இருந்ததால், பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது.

பல வழித்தடங்களில் குளிர்சாதன படுக்கை வசதி பேருந்துகள் ஆட்களின்றி இயக்கப்பட்டதால், நஷ்டம் ஏற்பட்டு இயக்கத்தை அதிகாரிகள் நிறுத்தினர். பின், கட்டணத்தை குறைக்க அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

இதனையேற்று, திங்கள் முதல் வியாழன் வரை கட்டணத்தை குறைத்தும், வெள்ளி முதல் ஞாயிறு வரை பழைய கட்டணத்தை வசூலிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

அதன்படி, வார நாட்களில் குளிர்சாதன படுக்கை பஸ்களுக்கு, கி.மீ.,க்கு, 45 காசு குறைத்து, 1.80 ரூபாய், சாதாரண படுக்கை பஸ்களுக்கு, 20 காசு குறைத்து, 1.35 ரூபாய், கிளாசிக் பஸ்களுக்கு, 10 காசு குறைத்து, 1.05 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த கட்டண குறைப்பால், விரைவு போக்குரவத்துக்கழக பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரிக்கும், வருவாயும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்சாதன படுக்கை வசதி பஸ் கட்டணம் விபரம்:
 

          நகரங்கள்      பழைய கட்டணம்      புதிய கட்டணம் 
சேலம் – சென்னை  725655
கோவை – சென்னை 1,080 975
கோவை – பெங்களூரு 805725
சென்னை – மதுரை 975880
சென்னை – தேனி 1,115 970 
சென்னை – நெல்லை1,315 1,145
சென்னை – திருச்சி 705635
பெங்களூரு – நாகர்கோவில் 1,480 1,345
சென்னை – மைசூரு 1065965 
சென்னை – பெங்களூரு 775 700

இதேபோல், கிளாசிக் மற்றும் சாதாரண படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

“கோழியோடு உறவு கொண்ட கணவன் ,அதை படம் பிடித்த மனைவி” -கடைசியில என்னாச்சு பாருங்க ..

ஒரு கணவர் கோழியோடு உறவு கொள்ளும் காட்சியை அவரின் மனைவி படம் பிடித்து போலீசில் போட்டு கொடுத்ததால் அவர் சிறையிலடைக்கப்பட்டார் .

“இவர்கள் நல்ல தமிழ்த்தாய்க்கு பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை” : இயக்குநர் அமீர் கண்டனம்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளை தவறாகப் பேசியும் மிரட்டும் பாணியிலும் சிலர் பொது வெளியில் கருத்துக்களை பதிவிட்டிருப்பது அநாகரீகத்தின் உச்சம் என்று இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்றுதான்....

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் : எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் யாராக இருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!