Home இந்தியா அரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள் 

அரசு வாகனங்களுக்கு தீவைத்த விவசாயிகள் 

உத்திரபிரதேசத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி அரசு வாகனங்களுக்கு தீவைத்தனர். 

உத்தரபிரதேச மாநிலம், உன்னாவில்,  மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்குவதை கண்டித்து கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கிருந்த அரசு வாகனங்களை தாக்கி தீ வைத்தனர்.

Fire

இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், போலீசார் மீது, தாக்குதல் நடத்தினர். இதனால் விவசாய நிலம் போர்களமானது. தொடர்ந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநில அரசு, கங்கை நீர் திட்டத்திற்காக, விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியது குறிப்பிடதக்கது. 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

செல்வாக்கு மிகுந்த அதிபர் பட்டியலில் டொனால்டு ட்ரம்ப்க்கு எந்த இடம் தெரியுமா?

அமெரிக்க அதிபர் என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் அதன் பாதிப்பு ஏற்படுத்தும் பதவியாகும். அதனால்தான் அமெரிக்க தேர்தல் அப்டேட்களை உலகமே உற்று கவனித்து வருகிறது. அமெரிக்காவின்...

கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக போராட்டத்தில் எதிர்கோஷமிட்ட விசிக-வினர் கைது

தர்மபுரி திருமாவளவனின் பேச்சை திரித்துக்கூறி பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாக கூறி, தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் நவ.6ம் தேதி முதல் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!