Home தமிழகம் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்: தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்: தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை அரசு மருத்துவர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை அரசு மருத்துவர்கள் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், உங்கள் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித் தருகிறோம் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அமைச்சர் வாக்குறுதி கொடுத்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் எந்த கோரிக்கையும் அரசு நிறைவேற்றப் படவில்லை.

Beela Rajesh

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததால் இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, அரசு சார்பில் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மாவட்ட செய்திகள்

Most Popular

பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றத்தை ரத்துசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றத்தில் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சுவரொட்டிகள் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம்...

டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்!

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில்...

ஊட்டி:ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட அத்திக்குன்னா எஸ்டேட்...

“பாஜக, தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது” – சஞ்சய் தத் குற்றச்சாட்டு

ஈரோடு பாஜக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு வருவதாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று மாலை நடந்த காங்கிரஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!