அரசு பேருந்தின் மீது மோதிய தனியார் கல்லூரி பேருந்து.. 30 பேர் படுகாயம்..!

அயோத்தி பட்டிணம் அருகே, வலப்புறமாக திரும்ப முற்பட்ட போது எதிரே வேகமாக வந்த ராமலிங்க புரத்தில் உள்ள  தனியார் கல்லூரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் பேருந்து… அயோத்தி பட்டிணம் அருகே, வலப்புறமாக திரும்ப முற்பட்ட போது எதிரே வேகமாக வந்த ராமலிங்க புரத்தில் உள்ள  தனியார் கல்லூரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

Accident

இந்த விபத்தில், அரசு பேருந்திலிருந்த 50 பேருக்கும், தனியார் கல்லூரி பேருந்திலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரு பேருந்திலும் முன்னால் அமர்த்திருந்த 30 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. காயப்பட்ட அனைவர்களும் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். 

Accident

வழக்கமாக, அரசுப் பேருந்து அயோத்தி பட்டிணம் அருகே வந்து தான் திரும்பும்  எனக் கூறப் படுகிறது. ஆனால், திடீரென கல்லூரி பேருந்து எதிரே வந்ததால் இரு பேருந்துகளின் வேகத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் இச்சம்பவம் நடந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, காரிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Accident

 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...