Home அரசியல் அரசியலில் கமல் எனக்கு போட்டியா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

அரசியலில் கமல் எனக்கு போட்டியா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

அரசியலில் கமல்ஹாசனை எனக்கு போட்டியாளராக கருதவில்லை  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: அரசியலில் கமல்ஹாசனை எனக்கு போட்டியாளராக கருதவில்லை  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காலூன்றி வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத துடிப்பு, ஸ்டைல் என மக்கள் மனதில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஆனால் மேற்கொண்டு எந்த பணிகளும் நடப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அதேநேரத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்துள்ள அவரிடம், அரசியலில் கமல் உங்களுக்கு போட்டியாளரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘அரசியலில் அவரை எனக்கு போட்டியாளராக கருதவில்லை. அவர் எனக்கு சக நடிகர். நல்ல நண்பர். அரசியலில் நுழைந்தால் நான் நானாக இருப்பேன். அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு 67 வயதாகிறது, இந்த வயதில் அரசியலில் நுழைவது எளிதல்ல’ என்று விளக்கமளித்துள்ளார்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையால் ஆளுநர் ஒப்புதல் கிடைத்ததா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சருடன் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர்...

தாடியை கிண்டல் செய்த நண்பரை, காலி செய்த கட்டிடத்தொழிலாளி

ஈரோட்டில் மதுபோதையில் தனது தாடியை கிண்டல் செய்த நண்பரை, கழுத்தை அறுத்துக்கொலை செய்த கட்டிட தொழிலாளி கைதுசெய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் (40) என்பவர், ஈரோட்டில் கட்டிட தொழிலாளியாக...

ஆளுநர்- முதல்வர் இடையே நடந்த அரை மணிநேரம் சந்திப்பு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதத்திற்கு மேல் ஆகியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். அதனால் நடப்பாண்டு...

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 12 போட்டிகளில் 6 –ல் வென்று 12 புள்ளிகளோடு...
Do NOT follow this link or you will be banned from the site!