Home அரசியல் அரசியலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது! மத்திய அமைச்சர் திடீர் அறிவிப்பு

அரசியலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது! மத்திய அமைச்சர் திடீர் அறிவிப்பு

அரசியலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று தகவல் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் போனவர். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க வேண்டும் என வலுவாக கருத்து கூறி வருபவர் கிரிராஜ் சிங். அவர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில், ராமர் கோயில் கட்டுவது மற்றும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது ஆகியவை எனது 2 முக்கியமான இலக்குகள். 

ராமர் கோயில் ( மாதிரி வரைபடம்)

என்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோயில் கட்டுவது இறுதி கட்டத்துக்கு நெருங்கி விட்டது. அதனால் என்னை போன்ற மக்கள் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. மக்கள் தொகையை கட்டுபடுத்துவதற்கான ஒரு சட்டத்தை அமல்படுத்திய பிறகு நான் அரசியலிருந்து ஓய்வு பெற்று விடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 67 வயதான கிரிராஜ் சிங், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கடந்த மாதம் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை பெருக்கம்

75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் தேர்தலில் நிற்க சீட் வழங்க கூடாது என்பதை பா.ஜ.க. கொள்கையாக வைத்துள்ளது. கிரிராஜ் சிங்குக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்தாலும் அவர் அரசியலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி!

திருவண்ணாமலை ஆரணி அருகே இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் பகுதியை...

200% உறுதியானது திமுக-மதிமுக கூட்டணி!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. காங்கிரஸ், மதிமுகவோடு தொடர்ந்து இழுபறியிலேயே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஒருவழியாக திருமாவளவனின் விசிகவுடன் தொகுதிப் பங்கீட்டை திமுக இன்று இறுதிசெய்தது....

“திமுகவிடம் அஞ்சுக்கும் 10க்கும் தொங்கும் ‘நல்ல கட்சி’ காங்கிரஸ்” – கொளுத்தி போட்ட பழ.கருப்பையா!

2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு 40 சீட்டுகள் கொடுத்ததால் தான் திமுக வெற்றியை நழுவவிட்டது என்ற கருத்து திமுக அனுதாபிகளிடையே நீண்ட நாளாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அதனை வெளிப்படையாகவே...

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… ஸ்டாலின் போடவிருக்கும் முக்கிய உத்தரவு!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்திருக்கிறது. மறுபுறம் வேட்பாளர்களை டிக் செய்வதற்கான நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. இரு நாட்களாக இந்த நேர்காணல் நடைபெற்றுவருகிறது.
TopTamilNews