அய்யோ பாவம் டி.டி.வி.தினகரன்… குனியக்குனிய கொட்டும் எடப்பாடி..!

எம்ஜிஆர் சிலைக்கு மாலைப்போட்டது குற்றமா? அவர் எல்லோருக்குமான தலைவர். இலைக்குள் சுருட்டி மடித்து விடாதீர்கள் என்று அமமுகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்து விட்டார். ஆனால் பொதுச் சின்னம் கிடைக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு வரை நெல்லையில் அமமுகவின் கை ஓங்கியிருந்தது. தேர்தலுக்கு பின் அமமுக கட்சியினர் பலர் அதிமுகவுக்கு நடையை கட்டி விட நாங்குநேரி இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. 

edappadi palanisamy

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் தற்போதுஅமமுகவை நெல்லை அதிமுகவினர் தலைகாட்ட விடுவதில்லை. குறிப்பாக அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்த உற்சாகத்தில் கட்சி நிர்வாகிகள் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதையும் பொறுத்துக் கொள்ளாத அதிமுக தரப்பு, நாங்கள் அமைத்த சிலை எங்களுக்கு தான் சொந்தம், மாற்று கட்சியினருக்கு சொந்தமில்லை.

அமமுக தரப்பு மாலை அணிவித்ததோடு சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை போலீசில் புகாரும் செய்து விட்டனர். எம்ஜிஆர் சிலைக்கு மாலைப்போட்டது குற்றமா? அவர் எல்லோருக்குமான தலைவர். இலைக்குள் சுருட்டி மடித்து விடாதீர்கள் என்று அமமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். 

Most Popular

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....

தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டலுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக உயர்வு!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், நேற்று நொடிக்கு 50,000 கனஅடி...