Home இந்தியா அயோத்தியில் அரசு திருமணம் -ஒரு ஜோடிக்கு 75000 ரூபாய் கொடுத்து-500 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் ....  

அயோத்தியில் அரசு திருமணம் -ஒரு ஜோடிக்கு 75000 ரூபாய் கொடுத்து-500 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் ….  

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய திருமண விழாவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 500 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மாநில தொழிலாளர் துறை, ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ. 75,000 கொடுக்கும், அதில் ரூ .65,000 மணப்பெண்ணுக்கு போய் சேரும்

அயோத்தியில் அரசு திருமணம் -ஒரு ஜோடிக்கு 75000 ரூபாய் கொடுத்து-500 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் ....  

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகப்பெரிய திருமண விழாவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 500 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள மாநில தொழிலாளர் துறை, ஒவ்வொரு தம்பதியினருக்கும் ரூ. 75,000 கொடுக்கும், அதில் ரூ .65,000 மணப்பெண்ணுக்கு போய் சேரும். இந்த விழாவில் மாநில தொழிலாளர் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தலைமையில்   தம்பதிகள் மாலைகளை பரிமாறிக்கொண்டு திருமண சடங்குகளை செய்தனர்.திருமணமானவர்களில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மணமக்களும்  அடங்குவர்.

amit-shah

“சுமார் 500 தம்பதிகள் இங்கே திருமண செய்தனர். அவர்களில் 10 பேர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சொந்த மத சடங்குப்படி  திருமணம் செய்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஆட்சியில், அனைவரின் வளர்ச்சிக்கும் எங்கள் துறை உறுதிபூண்டுள்ளது,” என்று மவுரியா கூறினார். அங்கு வந்த தம்பதிகள் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

“நாங்கள் அரசாங்கத்தின் உதவியால் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் நன்றியுடனும் இருக்கிறோம். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வருகிறார்கள், அரசாங்கம் ஒரு பெரிய சேவையை  செய்துள்ளது. நிதிப் பிரச்சினைகள் காரணமாக திருமணம் செய்து கொள்ள முடியாத ஏழை மக்களுக்கு இது மிகப்பெரிய உதவி,” என்று ஒரு மணமகள் அகிலேஷ் குமாரி கூறினார் .

அயோத்தியில் அரசு திருமணம் -ஒரு ஜோடிக்கு 75000 ரூபாய் கொடுத்து-500 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் ....  
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? – உண்மை நிலவரம் என்ன?

ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை தினங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமாக சேர்த்து 15 நாட்கள் விடுமுறை தினங்களாக...

மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்?

சென்னை அரும்பாக்கம் ஆர்கே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காரணமாக மாற்று குடியிருப்புக்கு செல்ல தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி...

மகளின் காதலனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய பெற்றோர்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கவுசல்யா என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முகமது பெமினாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்....

ஜூன் – ஜூலையில் வழக்கத்தை விட வெளுத்து வாங்கிய மழை… 50% எக்ஸ்ட்ராவாக பொழிந்த வான்மகள்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறுகையில், "ஜூலை மாதத்துக்கான நிகழ்தகவு வானிலை முன்னறிவிப்பின்படி இந்தியாவின் சில மாநிலங்களில் மழை இயல்பாகவோ, இயல்பைவிட குறைவாகவோ பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டது....
- Advertisment -
TopTamilNews