அம்மாவை அவதூறாக பேசியவர் கொலை ! கூலித்தொழிலாளியை சிறையில் தள்ளிய ஒத்த வார்த்தை !

சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கலில் நடைமேடையில் வாழ்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 
அருப்புக்கோட்டையை சேர்ந்த ராபர்ட் சென்னை கே.கே.நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைமேடையில் தங்கி கடந்த 18 ஆண்டுகளாக கூலித் தொழில் செய்து வருகிறார். அதேபோல் விழுப்புரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரும் அதே நடைமேடையில்தான் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, மது அருந்துவது என இருந்துள்ளனர்.

சென்னையில் பணம் கொடுக்கல் வாங்கலில் நடைமேடையில் வாழ்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 
அருப்புக்கோட்டையை சேர்ந்த ராபர்ட் சென்னை கே.கே.நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைமேடையில் தங்கி கடந்த 18 ஆண்டுகளாக கூலித் தொழில் செய்து வருகிறார். அதேபோல் விழுப்புரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரும் அதே நடைமேடையில்தான் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

robert

இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது, மது அருந்துவது என இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது தனக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை 125 ரூபாய் தருமாறு ராபர்ட்டிடம் கேட்டுள்ளார் (சிவக்குமாரிடம் வாங்கிய 250 ரூபாய் கடனில் ஏற்கனவே 125 ரூபாயைக் கொடுத்துவிட்டார். மீதம் 125 ரூபாயைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் ராபர்ட்) ஆனால் தன்னிடம் பணம் இல்லை என கூறியதுடன் வழக்கம்போல் நிதானத்தில் இருக்கும்போது அசிங்கமாக பேசுவது போல், குடிபோதையிலும் பேசியுள்ளார் ராபர்ட்.

sivakumar

அப்போது சிவக்குமாரின் தாயை பற்றி ராபர்ட் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போதையில் இருந்த சிவக்குமாருக்கு ஆத்திரம் பொங்க என் அம்மாவை தப்பாக பேசுகிறாயா என ராபர்ட்டுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்தார் சிவக்குமார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ராபர்ட் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Most Popular

“2 எதிரிகளுடன் ஒரே நேரத்தில் திமுக மோதி வருகிறது” : கருணாநிதி நினைவு தினத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட...

இலங்கை தேர்தல் – ராஜபக்‌ஷே கட்சி மாபெரும் வெற்றி. மற்ற கட்சிகளின் முழு விவரம்!

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நமது அண்டை நாடான இலங்கையில் ஆகஸ்ட் 5 –ம் தேதி தேர்தல் நடந்தது. ஓரிரு மாதங்கள் முன்பே நடைபெற...

மின்னல் வேகத்தில் சென்ற கார்… பறிபோன இளைஞர்களின் உயிர்!- கோவை பதறவைத்த விபத்து

கோயம்பத்தூர் அருகே இன்று அதிகாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியை அடுத்த காளையணூர் பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்து...

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...