அருள்மிகு ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோயிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எம்.ஜி. ஆர் பாடல்களை பாடி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர், தேமுதிகவில் இணைந்து 2009 ஆண்டு இணைந்து பின்னர் சில ஆண்டுகளில் தேமுதிக தலைமைமீது அதிருப்தியுற்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இன்று அருள்மிகு ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோயிலில்,#ஆடி_திருவிழாவை முன்னிட்டு நடந்த #கலை_நிகழ்ச்சியில் அமைச்சர்
திரு @mafoikprajan அவர்கள் பாடிய புரட்சி தலைவர் #எம்ஜிஆர் அவர்களின் பாடலின் காணொளி.
உடன் ஆவடி நகர கழக செயலாளர்
திரு @rcdeenadayalan அவர்கள் மற்றும் #கழக_நிர்வாகிகள். pic.twitter.com/CTt56AXQwH— AMVI. D. Srinivasa Thilak (@srinivasathilak) August 11, 2019
அதிமுக பிளவுபடும் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன், தனது அமைச்சர் பதவியை விட்டு விட்டுதான் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார் பாண்டியராஜன். அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்தவுடன் புதிய அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாஃபா பாண்டியராஜன், அருள்மிகு ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு நடந்த கலை நிகழ்ச்சியில் பாடிய பாடல் வைரலாகிவருகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் பாடலான, கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… யாருக்காக கொடுத்தான்… என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். அவருடன் ஆவடி நகர கழக செயலாளர் தீன தயாளனும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.