அமைச்சர் வீட்டுக்குள் நண்டு விட்டு போராட்டம்!

மகராஷ்டிராவில் அமைச்சர் தனாஜி சாவந்த்தை கண்டித்து அவரது வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

மகராஷ்டிராவில் அமைச்சர் தனாஜி சாவந்த்தை கண்டித்து அவரது வீட்டில் நண்டு விடும் போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

மகராஷ்டிராவில் கடுமையான மழை எதிரொலியாக ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை கடந்த ஜூலை 2ம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் உடைந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 20 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன மேலும் பலரின் சடலங்களைத் தேடும் பணி நடக்கிறது. அணை உடைவதற்கு நண்டுகளே காரணம் என அம்மாநில நீர்வளப் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனஜி சவந்த், சர்ச்சைக்குறிய கருத்தை பதிவிட்டார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.  அமைச்சரின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த நண்டுகளை அமைச்சரின் வீட்டில் அவிழ்த்து விட்டனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...