Home அரசியல் அமைச்சர் பதவி... ஆட்டம் காட்டும் சீனியர்கள்... வெடித்துக் கிளம்பிய அதிமுக நிர்வாகிகள்..!

அமைச்சர் பதவி… ஆட்டம் காட்டும் சீனியர்கள்… வெடித்துக் கிளம்பிய அதிமுக நிர்வாகிகள்..!

அதிமுகவில்  இரண்டு அமைச்சர் பதவிகள் காலியாக இருக்கிறது. அதில் ஒன்றை தன் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கேட்க… முடியாது என மறுத்து வருகிறார் எடப்பாடி.  யாருக்கு பதவியை கொடுப்பது என்ற சிக்கல் நீடித்து வரும் நிலையில், எடப்பாடிக்கு மிகவும் வேண்டிய 10 பேர் ’’ஆரம்பத்தில் இருந்தே உங்களுடன் தான் இருக்கிறேன். நீங்கள் சொல்லும் இடங்களில் படித்து பார்க்காமலேயே  கையெழுத்து போட்டு இருக்கேன்… அமைச்சர்களாக இருந்தும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சியை வெற்றி பெற வைக்காதவர்கள் எல்லாம் இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பதவி... ஆட்டம் காட்டும் சீனியர்கள்... வெடித்துக் கிளம்பிய அதிமுக நிர்வாகிகள்..!

edappadi

அவர்களில் சிலர் வேறு  கட்சிக்கு தாவும் திட்டத்துடன் பணத்தை குவித்து வருகின்றனர். ஆனால் நாங்கள் அப்படியல்ல. நீங்கள் பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்களுடனேயே இருப்போம். அப்படிப்பட்ட எங்களுக்கு அமைச்சர், வாரிய பதவிகளை  வழங்கினால் மக்களிடம் செல்வாக்கு அதிகரிப்பதுடன், அதை அதிமுக வாக்கு வங்கியாக மாற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.  இதையெல்லாம் கேட்டுக் கொண்ட எடப்பாடி  என் வெளிநாட்டு பயணம் முடியட்டும்… மற்றவர்களை அமைச்சர் பதவியிலிருந்து தூக்குகிறேனோ இல்லையோ? உங்களுக்கு நிச்சயம் பதவி தருகிறேன் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். 

இந்த பதவி கேட்டு சீனியர்கள் தொடர்ந்து எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். மதுரையை சேர்ந்த ராஜன் செல்லப்பா, தேனி மாவட்டத்தை சேர்ந்த  எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர், ‘ நாங்கள் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறோம். 2 அமைச்சர்களோட பொறுப்பை கூடுதலாக மத்தவங்ககிட்டே  கொடுத்திருக்கீங்க. அதை எங்களுக்கு தாருங்கள்… எனக் கேட்டு வருகிறார்களாம்.  ஜக்கையன், ‘’ நீங்க சொல்லித்தான் டி.டி.வி.தினகரன் பக்கம் போகாமல் கடைசி நேரத்தில் உங்க பக்கம் வந்தேன். இதற்காகவாவது நீங்க அமைச்சர் பதவி தரணும்’’ ஒற்றை காலில் நிற்கிறாராம். 

edappadi and mla

அவருக்கு கொடுத்தால் ஓ.பி.எஸை பகைத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் பொறுமை காக்க சொல்லி இருக்கிறார் எடப்பாடி. அதை ஏற்க மறுத்த ஜக்கையன் ஏற்கனவே தேனி மாவட்டம் அதிமுக கோட்டையாக இருந்தது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு போன தடவை பொறுப்புகளை அள்ளிக் கொடுத்ததால், யாருமே கட்சி வேலை பார்க்கிறது இல்லை. இதே நிலைமை  நீடித்தால் கட்சி நிலைமை வீணாப்போயிரும். ஏற்கனவே மாவட்ட தலைமை அலுவலகத்தை நம்ம பக்கம் இழுக்க, டிடிவி கட்சிக்காரங்களோட போராட வேண்டியிருக்கு… ஓ.பி.எஸும்  சென்னை, டெல்லின்னு பிஸியாய் இருக்காரு… அதனால இந்த  முறை எனக்கு அமைச்சர் பதவி வேணும்’ என அடம்பிடித்து வருகிறார் ஜக்கையன்.

அமைச்சர் பதவி... ஆட்டம் காட்டும் சீனியர்கள்... வெடித்துக் கிளம்பிய அதிமுக நிர்வாகிகள்..!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நாளை இவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கிலிருந்து விலக்கு!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதிக்கு தான். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 இரண்டு தவணையாக வழங்கப்படுமென அறிவித்தார். அதில், முதல் தவணையை...

எனது செயல்பாட்டின் அடிப்படையில் என்னை மதிப்பீடு செய்யுங்கள்! நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றபின் தன்னை தயாள குணம் கொண்ட வகையில் வாழ்த்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...
- Advertisment -
TopTamilNews