Home அரசியல் அமைச்சரின் இறால் பண்ணை... தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

அமைச்சரின் இறால் பண்ணை… தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

தனது 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாள் பிரச்சாரத்தை நேற்று முன் தினம் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் தொடங்கினார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். பிரச்சாரத்தின்போது அவர் வயலில் நடவு செய்துகொண்டிருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கு நல்ல காலம் பிறகும் என்று சொல்லி சென்றார்.

நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனது இரண்டாம் நாள் பிரச்சாரத்தினை தொடங்கினார். அப்போது மூன்று முறை வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி சமீபத்தில் மறைந்த மா.மீனாட்சிந்தரம் இல்லத்துக்கு சென்று அவரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து, கழக கொடியினையும் ஏற்றிவைத்தார்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து வங்கக்கடல் மீது மீனவர்களுடன் படகில் பயணித்த உதயநிதி, கடல் பயணத்தின் போது சந்திக்கும் சவால்கள், வெளிநாட்டு ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் போன்ற நெருக்கடிகள் குறித்து உடன் வந்த மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர், நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களை சந்தித்தபோது, சாகர் மாலா-மீன்பிடி திருத்தச் சட்டம், மீனவர் வாழ்வை விழுங்குமென அச்சம் தெரிவித்தனர். அதற்கு, கலைஞர் ஆட்சியின் சாதனைகளை சுட்டிக்காட்டி மலரவுள்ள தலைவர் ஸ்டாலின் அரசு மீனவர் பிரச்சினை தீர்க்கும் என உறுதியளித்தார் உதயநிதி.

வேதாரண்யம் கோடியக்காடு உப்பளம் சென்று உப்பு உற்பத்தியாளர்-தொழிலாளர் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து மனு அளித்தனர். பாசிச பாஜக- அடிமை அதிமுகவின் அலட்சியத்தால் உப்பள தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் சரிசெய்யப்படும் என்றவர், வேதாரண்யம் – கள்ளிமேடு அடப்பாறு பாலத்தை பார்வையிட்டு, அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் இறால் பண்ணைகளை காக்க பாலத்தை தவறான இடத்தில் கட்டியுள்ளனர் என்று தெரிவித்த உதயநிதி, விவசாய நிலத்தில் கடல்நீர் புகுந்து பாதிக்கப்படும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நிவர் புயல் சென்னையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதால், பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆண்டு ஏற்பட்ட...

இந்த 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயலால் 15 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்: அதிர்ச்சியில் மதுபிரியர்கள்!

வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர புயலாக மாறி, சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அதிகாலை...

பாஜகவின் வேல் யாத்திரை ரத்து : கூட்டணி குறித்து சூசகம் தெரிவித்த எல். முருகன்

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை தடையை மீறி நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்த நிலையில் பாஜக...
Do NOT follow this link or you will be banned from the site!