Home உலகம் அமெரிக்காவை போட்டுத் தாக்கும் கொரோனா – உயிரிழப்பு 88 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவை போட்டுத் தாக்கும் கொரோனா – உயிரிழப்பு 88 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை நெருங்கியது.

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை நெருங்கியது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 46 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 17 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

ttn

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 88,507-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 14 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,459-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 274,367 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31,610-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 223,885 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,529-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 179,506 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஆன்மீக அரசியல்தான்… ரஜினி உறுதி

முப்பது ஆண்டுகாலமாக சஸ்பென்ஸ் வைத்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியல்தான் என்றும் தெரிவித்தார். ரஜினி...

டிராவில் முடிந்த பரபரப்பான போட்டி – ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் #ISL

ISL கால்பந்து திருவிழாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு கோவாவின் திலக் மைதானத்தில் ஹைதராபாத் Vs ஜாம்ஷெட்பூர் அணிகளுக்குமான போட்டி நடந்தது. நேற்றைய நிலவரப்படி, ஹைதராபாத்...

“ஜனவரியில் கட்சித் துவக்கம்” மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் : ரஜினிகாந்த் பரபரப்பு ட்வீட்!

ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " வரப்போகிற...

“முஸ்லிமா மாறிடு இல்லேன்னா என்னை விட்டு ஓடிடு” -மதம் மாற சொல்வதாக கணவன் மீது புகார்

ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு முஸலிம் வாலிபர் ,அந்த பெண்ணை திடீரென முஸ்லீம் மதத்திற்கு மாற சொல்லி கொடுமைப்படுத்தியதால் போலீசார்...
Do NOT follow this link or you will be banned from the site!