Home உலகம் அமெரிக்காவில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 32 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

New york

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61,669-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 10 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24,275-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 236,899 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27,682-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 203,591 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,087-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 166,420 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 61 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி முதலில்...

முதல் டெஸ்ட் போட்டி- 2ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ்...

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் கிணற்றில் குதித்த மகள்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் வெறுத்த 11ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

“அண்ணாமலையின் போராட்டம்- அரசியல் நாடகம்”

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews