Home உலகம் அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3136 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

ttn

இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் உயிரிழப்பு 26-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 36 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஒரேகான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” – தெற்கிலிருந்து பறந்த இரு வாழ்த்துகள்!

காங்கிரஸ் முன்னாள் தலைவருமான எம்பியுமான ராகுல் காந்தி இன்று தனது 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். மக்களுக்கு நிவாரணப்...

இலங்கை தமிழர்களுக்கு ரூ.4 ஆயிரம் ; திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் முதல்வர் என ஸ்டாலின் அறிவித்தார். அதன் படி,...

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை – எடியூரப்பாவை விளாசிய விஜயகாந்த்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது...

ஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவுக்கு மட்டும் தான் தெரியும் – நத்தம் விஸ்வநாதன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள்,...
- Advertisment -
TopTamilNews