அமித் ஷா அனுப்பிய ஸ்லீப்பர் செல்லா பிரஷாந்த் கிஷோர்..? குழம்பித் தவிக்கும் மு.க.ஸ்டாலின்..!

பிகாரில் எழுந்துள்ள இந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் உள் விவகாரம் தமிழ்நாடு வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவரும், தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோருக்கும், அக்கட்சித் தலைவரும், பிகார் முதல்வருமான நித்தீஷ்குமாருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. பிகாரில் எழுந்துள்ள இந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் உள் விவகாரம் தமிழ்நாடு வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஸ்லீப்பர் செல் இருப்பதாக முணுமுணுக்கப்பட்டது. தனது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக டி.டி.வி.தினகரன் அவ்வப்போது சொல்வார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இப்போது தேசிய அளவில் ஸ்லீப்பர் செல் பற்றிய விவாதம் எழுந்துள்ளது.

STALIN

“அமித் ஷா சொல்லிதான் பிரசாந்த் கிஷோரை சேர்த்துக் கொண்டதாக நித்தீஷ்குமார் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பிரசாந்த் கிஷோரை ஸ்லீப்பர் செல்லாக அமித் ஷா பயன்படுத்துகிறாரா? இந்த பிரசாந்த் கிஷோர்தானே திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படியென்றால் பிரசாந்த் கிஷோர் மூலமாக திமுகவின் உள் விவகாரங்கள் அமித் ஷாவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்குமா? நித்தீஷ்குமார் இப்படிப் பேசும் ஆளல்ல. ஆனால் அவரே பேசியிருக்கிறார் என்றால் நெருப்பில்லாமல் புகையுமா?” என்ற கேள்வி திமுகவின் நிர்வாகிகளிடையே எழுந்திருக்கிறது.

பனைமரத்தில் தேள்கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டும் என்பார்கள். அதேபோல பாட்னாவில் இடித்த இடி சென்னையிலும் எதிரொலிக்கிறது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....