Home தேர்தல் களம் அமமுகவுக்கு தூது அனுப்பிய பாஜக; அதிர வைக்கும் டி.டி.வி..! 

அமமுகவுக்கு தூது அனுப்பிய பாஜக; அதிர வைக்கும் டி.டி.வி..! 

சில கோரிக்கைகளுடன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக கன்னியாகுமரியில் போட்டியிடும்  பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு தூது அனுப்பியதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு  பேட்டியளித்த அவர், ’திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் அமமுக சார்பாக சிறுபான்மையினரை நிறுத்த பாஜக எங்களை அணுகியது. கன்னியாகுமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக என்னிடம் தூது அனுப்பினார்.

பொன்

ஆனால் நாங்கள் பொன்னாரை இதுவரை நேரடியாக சந்திக்கவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. கருப்பு முருகானந்தம் எனது சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர். இல்லையெனில் கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை அமமுக சார்பாக நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் நெருக்கடி கொடுத்தனர்.

பாஜக

இது போல பல்வேறு நிர்பந்தங்கள் எனக்கு பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அம்மாவின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மட்டுமே நாங்கள் அடிப்பணிவோம்’’ என அவர் தெரிவித்தார். 

கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் லட்சுமணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

 

இதையும் வாசிங்க

’சின்னம்மா செத்துட்டாங்க’…மேடையில் உளறிக்கொட்டிய டி.டி.வி அணி நடிகர்…

மாவட்ட செய்திகள்

Most Popular

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...

காதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகே இளம்பெண்ணை காதலிக்க கூறி ஒருதலைக் காதலன் மிரட்டல் விடுத்ததால் விரக்தியில் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சித்தார். ஆரணி அடுத்த மோட்டுக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த...

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் போலீசார் விசாரணை…

திருச்சி துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி...

அரசு மருத்துவமனையிலிருந்து எம்ஜிஎம் கொண்டு செல்லப்பட்டார் அமைச்சர் காமராஜ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ், மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!