Home தேர்தல் களம் அமமுகவிலிருந்து விலகுகிறார் டி.டி.வி.தினகரன்..? தோல்வியை விருந்து வைத்து கொண்டாடும் தாய்மாமன்..!

அமமுகவிலிருந்து விலகுகிறார் டி.டி.வி.தினகரன்..? தோல்வியை விருந்து வைத்து கொண்டாடும் தாய்மாமன்..!

டி.டி.வி.தினகரனை வைத்து சசிகலா போட்ட ஸ்கெட்ச் எல்லாம் செல்லா காசு ஆகிவிட்டது என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

டி.டி.வி.தினகரன், சசிகலாவுக்கு  கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்துவிட்டது. சுத்தமாக டெபாசிட் காலி. ஒவ்வொரு சுற்றிலும் 50 ஓட்டுக்களை வாங்கவே பாடாத பட்டுபோனார். அவரை உள்ளூர்  அமமுகவினர் நாசுக்காக காலை வாரிவிட்டனர். இந்நிலையில் சசிகலாவுக்கு தான் பத்து சுற்றில் வாங்கிய ஓட்டுக்களை வாக்குகளை தூது மூலம் கொடுத்து அனுப்பினாராம் புகழேந்தி. sasikala

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகலா டி.டி.வி.தினகரனை சிறைக்கு உடனே வரச்சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார்.  அநேகமாக இந்த சந்திப்பு விரைவில் நடக்கலாம் என்கிறார்கள். அப்போது கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகச் சொல்லும் வாய்ப்பு இருக்கிறதாம். டெபாசிட் இழந்த முகத்தோடு எப்படி போவது என்று யோசிக்கிறாராம் டி.டி.வி.தினகரன். பில்டப் மேல் பில்டப் கொடுத்து தன்னை பெரிய மாநில தலைவராக காட்டிக் கொண்ட டி.டி.வி.தினகரன் இப்போது அச்சத்தில் இருக்கிறாராம்.sasikala

ஆர்.கே.நகர் வெற்றியை வைத்துதான் கட்சியை உடைத்தேன். எம்.எல்.ஏ.,க்களை இழுத்தேன். இனி என்னிடம் இருக்கும் கட்சி தொண்டர்கள் எந்த கட்சிக்கு செல்வார்களோ? என்று புலம்ப ஆரம்பித்துள்ளதாக அவரின் அடிபொடிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். sasikala

அதே வேளை மன்னார்குடியில் சசிகலாவின் அண்ணன் திவாரகன் குடும்பம் ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ரீதியில் டி.டி.வி.யின் தோல்வியை இனிப்பு வழங்கி கறி விருந்து வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. ஒரு எம்.பி சீட்டும் பிடிக்க முடியவில்லை. ஒரு எம்.எல்.ஏ., சீட்டும் பிடிக்க முடியவில்லை. டி.டி.வி.தினகரனை வைத்து சசிகலா போட்ட ஸ்கெட்ச் எல்லாம் செல்லா காசு ஆகிவிட்டது என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“வேற லெவல் வாக்கு வித்தியாசத்துல ஜெயிப்பீங்ளா” – துரைமுருகனின் ‘நக்கல்’ கேள்வியும் உதயநிதியின் ‘வெட்க’ பதிலும்!

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபுறம் இருந்தாலும், வெற்றி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல் மறுபுறம் அனல் பறந்தது. நேர்காணல் குழுவில் தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை...

ஆட்டு வியாபாரிகளை தாக்கி ரூ.60 ஆயிரம் பணம், தங்க நகை வழிப்பறி!

தூத்துக்குடி எட்டயபுரம் அருகே ஆட்டு வியாபாரிகளை தாக்கி 60 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

“கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு” – பொன்.ரா

2019ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார். கொரோனா கொண்டுபோன தலைவர்களில் வசந்தகுமாரும் ஒருவர்....

“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”

பாஜகவின் ஆதரவாளர்களை விட எதிர்ப்பு தெரிவிப்பவர்களே தமிழகத்தில் அதிகம். திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றன. எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக,...
TopTamilNews