Home சினிமா 'அப்பாவும் அம்மாவும் பிரிந்தது சந்தோஷம் தான்': ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

‘அப்பாவும் அம்மாவும் பிரிந்தது சந்தோஷம் தான்’: ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சலை காதலித்து வந்த ஸ்ருதி  சமீபத்தில் அவரை பிரிந்தார்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும்  வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார். பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சலை காதலித்து வந்த ஸ்ருதி  சமீபத்தில் அவரை பிரிந்தார். மேலும் ஸ்ருதி  ஹாசன் 2017இல் தெலுங்கில்  வெளியான கட்டமராயுடு படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்தார். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கவுள்ளார்.

SRUTI

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையதள ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில்,  ‘எங்க அப்பா எங்களை கொஞ்சுனது இல்ல. எல்லா விஷயங்களிலும் எங்ககிட்ட கருத்து கேட்பார். எங்க அப்பா பெரிய நடிகர் என்று எனக்கு சின்ன வயதில் தெரியாது. ஒரு நாள் வீட்டிற்கு லேடி கெட்டப்பில் வருவார், மறுநாள் புலி கெட்டப், இன்னொரு நாள் இந்தியன் தாத்தா கெட்டப். அப்போதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.

sruti

ஒருமுறை எங்கப்பாவுக்கு  ஒருமுறை ஆக்ஸிடண்ட்  நடந்துச்சு, அவர் பிழைப்பாரான்னு தெரியலன்னு அவரோட மேனேஜர் சொன்னாரு. எனக்கு ரொம்ப பயமாக இருந்துச்சி.  அப்போ நான் நெனைச்சது, அப்பா மறுபடியும் மீண்டு வந்தா சூப்பர் ஹீரோ தான்னு நெனச்சேன். எங்க அப்பா சூப்பர் தான் ஹீரோ தான். அவருடைய வில்பவர் யாருக்குமே  இருக்காது’ என்றார். 

sarika

தொடர்ந்து பேசிய அவர், என் அப்பா அம்மா பிரிந்தது எனக்கு சந்தோஷம்.  ஒன்றாக இருந்து சண்டை போட்டுகொண்டு இருப்பதை  விட அம்மா, அப்பா பிரிந்து அவரவர் வாழ்க்கையைச்  சந்தோஷமாக வாழ்கின்றனர்.  மற்றவர்களுக்கு வேணாம் அது செய்தியாக இருக்கலாம். ஆனால், வீட்டில் இருக்கிறவர்களுக்கு அப்படி இருக்காது. ரொம்ப வேதனைக்கு உரிய விஷயம்.  சேர்த்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால்  அவர்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள் என்பதால் விட்டுவிட்டேன்’ என்றார். 

 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘தேர்தல் பணி தீவிரம்’ மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கமல்ஹாசன்!

தேர்தல் பணிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் நவ.2, 3 தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி...

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி ஓசூர் அருகே 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்கள், அவரை கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல்!

தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.5 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த...

”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” !

ஆப்ஷனல் அப்கிரேட் ஆக விண்டோஸ் 10 இயங்குதளத்தை இயக்கிக்கொள்ளக்கூடிய பிரத்யேக 85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி ஆண்டிராய்ட் டிவியை வியூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!