Home லைப்ஸ்டைல் அப்பாவுக்கு தர்றதுக்கு கிப்ட் ஐடியாஸ்... தந்தையர் தின ஸ்பெஷல்!

அப்பாவுக்கு தர்றதுக்கு கிப்ட் ஐடியாஸ்… தந்தையர் தின ஸ்பெஷல்!

தந்தையர் தினத்தை உலகம் பூரா இன்னைக்கு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நாம மழை வருமா… இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்குமா?ன்னு நகத்தைக் கடிச்சுக்கிட்டு இருக்கோம். காலைல சோம்பலோடு எழுந்திரிச்சு, ‘ஹாப்பி ஃபாதர்ஸ் டே டாடி!’ன்னு சொல்றதுலயா  ஃபாதர் டேவோட மகிழ்ச்சி இருக்கு?

தந்தையர் தினத்தை உலகம் பூரா இன்னைக்கு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நாம மழை வருமா… இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடக்குமா?ன்னு நகத்தைக் கடிச்சுக்கிட்டு இருக்கோம். காலைல சோம்பலோடு எழுந்திரிச்சு, ‘ஹாப்பி ஃபாதர்ஸ் டே டாடி!’ன்னு சொல்றதுலயா  ஃபாதர் டேவோட மகிழ்ச்சி இருக்கு?
இன்னைக்கு உங்க அப்பாவுக்கு என்ன கிப்ட் தரலாம்னு ஒரு சின்ன லிஸ்ட் போட்டிருக்கோம். இன்னைக்கே தரலைன்னாலும் பரவாயில்லை. ஆனா.. சர்ப்ரைஸா நிச்சயமா இதுல ஏதாவது ஒரு கிப்டை தாங்க… நமக்காக இத்தனை வருஷமா கஷ்டப்பட்டு, கலங்கிக்கிட்டு இருக்கிறவருக்கு இந்த சின்னப் பரிசு, ரொம்பவே ஸ்பெஷலாவும், ஆறுதலாகவும் இருக்கும். இன்னும் 50,60 வருஷத்துக்கு அவரை உற்சாகமாகவும் வெச்சுக்கிட்டு இருக்கும்.

1.டிவி ரிமோட்

re

என்னடா… கிப்ட்னு சொல்லிட்டு, டி.வி. ரிமோட்னு இருக்கேன்னு யோசிக்கறீங்களா? உங்கப்பாவுக்கு வயசாயிடுச்சுன்னு யார் சொன்னா? இந்தியா முதல் முறையா உலகக் கோப்பையை வென்றப்போ இதைப் படிச்சுக்கிட்டு இருக்கிற பாதி பேர் பொறந்திருக்கவே மாட்டீங்க. ரெண்டாவது முறை உலகக் கோப்பையில், நீங்க சச்சின், யுவராஜ், சேவாக், டோனின்னு கொண்டாடிக்கிட்டு இருந்தப்போ, உங்களுக்காக பொருள் தேடி அவர் பரபரப்பா இயங்கிக்கிட்டு இருந்திருப்பாரு?
‘இன்னைக்கு உங்களுக்கான நாள்.. நீங்க கொண்டாடுங்க… உங்கப் பக்கத்துல நாங்க உட்கார்ந்து, உங்களோட நேரத்தை செலவிடுகிறோம்’ன்னு ஆறுதலா ஒரு வார்த்தை, அக்கறையா சில பொழுதுகள்… இதை விட பெரிய கிப்ட் இருக்க முடியுமா என்ன? 

தாத்தாவைக் கொண்டாடுங்கள் :
ஊரில் இருக்கும் உங்கள் தாத்தாவிடம் போனில் பேசலாம்… எந்த அப்பாவுக்கு தான், அவங்க அப்பாவுக்கு மரியாதை தர்றது பிடிக்காமல் போகும். ‘பையனை நல்லா வளர்ந்திருக்கான் பாரு’ன்னு அவரோட பெத்தவங்க சொன்னா, அதை விட உங்க அப்பாவுக்கு வேறு என்ன சந்தோஷம் கிடைக்க முடியும்?

ஸ்மார்ட் டி-ஷர்ட்: 

t

‘என் அப்பா தான் ரியல் ஹீரோ’ என்பது மாதிரியான வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்டுகளை நீங்கள் அணியலாம்.  மேலும், உங்கள் பெயர் அச்சிடப்பட்ட டி-ஷர்டுகள் வழங்கலாம். அதில் உங்கள், தந்தை பெயரையும் அச்சிடலாம். 

செல்ஃபி புள்ள: 

s

யார் யார்கிட்டேயோ ஆட்டோகிராப் வாங்குறோம், செல்ஃபி எடுக்க ஆசைப்படறோம். இன்றைய நாளை ஏன் உங்க அப்பாவைக் கொண்டாட ஒதுக்கக்கூடாது. இன்னைக்கு ஒரு நாள், ஒரு லாங் ட்ரைவ் அவரைக் கூட்டிக்கிட்டுப் போங்க.. அவரோட விதவிதமா செல்ஃபி எடுங்க… ஆனா, எடுக்குற செல்பி பேஸ்புக் ஸ்டேடஸுக்காகவும், வாட்ஸ-அப் புரொபைல் படத்துக்காகவும்னு இல்லாம, அவரோட சந்தோஷத்துக்காகன்னு இருக்கட்டும்.

வாலெட் 

w

அவர் பயன்படுத்துகிற பர்ஸ், ஷூ, பெல்ட் எல்லாத்தையும் பாருங்க… எந்த வருஷம் வாங்கினதுன்னே தெரியாத அளவுக்கு எக்ஸ்பைரி தேதியெல்லாம் முடிஞ்சு, வெளுத்துப் போயிருக்கும். இப்படி, அவர் தினம் தினம் பயன்படுத்துகிற பொருட்களை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டீங்கன்னா, எல்லாமே சேர்த்து மூவாயிரம், நாலாயிரத்துக்குள்ள தான் வரும். எதுவுமே சொல்லாமே மொத்தமா அவருக்குத் தேவையானதை, தினம் பயன்படுத்துவதை லிஸ்ட் போட்டு வாங்கித் தாங்க… ‘இப்போ இது தேவையா?’ன்னு திட்டுகிற தந்தையா இருந்தா கூட, நீங்க அந்த பக்கமா நகர்ந்ததுக்கப்புறமா எடுத்துப் பார்த்து சந்தோஷத்துல கண் கலங்குவாரு…
இந்த லிஸ்ட் எல்லாமே ரொம்ப சின்னது தான்… ஆனா கொண்டாடுகிற மனசு இருக்கே.. அது ரொம்ப பொருசு மை டியர் யூத்ஸ்.. மனசு இருந்தா எப்படி வேணா கொண்டாடலாம். எவ்வளவு வேணும்னாலும் கொண்டாடலாம். உங்களோட கொண்டாட்டங்களையும், அவரது நெகிழ்ச்சியையும் [email protected] மெயில் ஐடிக்கு புகைப்படத்தோட எழுதுங்க… மறக்காம உங்க வாட்ஸ் அப் நம்பரையும் சொல்லுங்க. சிறந்தவற்றை நம்ம டாப் தமிழ் நியூஸ் தளத்துல வெளியிடலாம். பரிசுகளும் நிச்சயமா உண்டு.

மாவட்ட செய்திகள்

Most Popular

சி.பி.ஐ.க்கு செக் வைச்ச உத்தவ் தாக்கரே அரசு.. மகாராஷ்டிராவில் இனி வழக்குகளை விசாரிக்க மாநில அரசின் அனுமதி அவசியம்

மகராஷ்டிராவில் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அளித்து இருந்த ஒப்புதலை முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு திரும்பபெற்றுள்ளது. மேலும் இங்கு வழக்குகளை விசாரிக்க முதலில் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும்...

கையை மட்டும் கழுவிக்கலாம்…. பாத்திரங்கள், டிபன் பாக்ஸ் கழுவ கூடாது… நாடாளுமன்ற பணியாளர்களுக்கு உத்தரவு

நாடாளுமன்ற வளாகத்தில் பாத்திரங்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களை கழுவ கூடாது என்று அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில்...

வட்டி வருவாய் அமோகம்.. ஆனால் லாபத்தில் சரிவை சந்தித்த பஜாஜ் பைனான்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.965 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!