Home சினிமா அப்பாக்கள் கொண்டாடும் அஜித்தின் ‘கண்ணான கண்ணே’!

அப்பாக்கள் கொண்டாடும் அஜித்தின் ‘கண்ணான கண்ணே’!

‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை அப்பாக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை: ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலை அப்பாக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

டி.இமான் இசையில் இப்படத்தின் மெரும்பாலான பாடல்கள் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் மெலடி பாடலான ‘கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கவிஞர் தாமரை வரிகளில் சித்ஸ்ரீராம் பாடிய இப்பாடல் வெளியாகி 12 மணி நேரமாகியும் சமூக வலைத்தளங்களில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அப்பா-மகள் பாசத்தை மையப்படுத்தி வெளியான இப்பாடலில் அப்பா மகள் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்துவதால், பெரும்பாலான அப்பாக்கள் தங்கள் மகள்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை #MyKannaanaKanney என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவு செய்து வருகின்றனர். ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து வருவது ட்ரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலை போல், ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணான கண்ணே’ பாடலும் மிகப் பெரிய ஹிட்டாகியுள்ளது. மகளை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும் இப்பாடல் பொக்கிஷமாக கருதப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

14 பேரை கடித்த வெறி நாய் : அச்சத்தில் உறைந்த மக்கள்!!

ஒரு வாரத்தில் 14 பேரை கடித்து குதறிய நாயால் திருவொற்றியூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருவொற்றியூர் தாங்கல்...

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பஞ்சாப் அரசு மறுக்கவில்லை… பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ராகுல்

உத்தர பிரதேச அரசு போலல்லாமல், பஞ்சாப், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுக்கவில்லை என பா.ஜ.க.வுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

பணிவு குறித்து புரியாததால் அவர்கள் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள்.. சிவ்ராஜ்

பணிவு குறித்து புரியாததால் கமல் நாத்தும், திக்விஜய சிங்கும் நான் மக்கள் முன் தலை வணங்குவதை மண்டியிடுவதாக கூறுகிறார்கள் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர்…. ஏக்நாத் கட்சே தகவல்

பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர் என அந்த கட்சியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஏக்நாத் கட்சே தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக...
Do NOT follow this link or you will be banned from the site!