அப்டியே மழை வந்தாலும்….. பிரதீப் ஜான் யோசனை!

இந்திய வானிலை ஆய்வு மையம் மொத்தமே நாலே நாலு டெம்ப்ளெட் அறிவிப்புகளை சீட்டு குலுக்கிப்போட்டு எடுத்து மாற்றிமாற்றித் தருவதாக பெரும்பாலானோர் நினைப்பதால், வானிலை-மழை-புயல் என்றாலே அனைவரும் முக்கியமாக சென்னைவாசிகள் எட்டிப்பார்ப்பது பிரதீப் ஜான் ஃபேஸ்புக்கைத்தான்.

ஜூன் 16ஆம் தேதி வரை கணக்கில் கொண்டால், சென்னையில் கடைசியாக மழை பெய்தது 193 நாட்களுக்கு முன்பாக. சென்னையில் மழைவரவைக்க ஆன்மீகவாதிகள் அண்டாக்குள் அமர்ந்து மந்திரம் ஓதியும், அவர்களை கிண்டல் செய்யும் நாத்திகவாதிகள் சோஷியல் மீடியாவில் மீம்களை தெறிக்கவிட்டும், ஏரியை தூர் வாரி நீரை சேமியுங்கள் என சமூக ஆர்வலர்களும் ஆளுக்கு ஒருபக்கம் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். சென்னையில மழை வருமா, வந்தா தேங்குமா, இந்த ஊர்லயே இருந்து தொழில் பண்ணலாமா இல்லை வேற ஏதாச்சும் மாநிலத்துக்கு எஸ்கேப் ஆகலாமான்னு தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் பிளாட்பார கிளி ஜோசியர்களை நாடுவதாக நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Drought in Chennai

இருபது-முப்பது கம்ப்யூட்டர்கள், 30-40 அதிகாரிகள், சென்னை நுங்கம்பாக்கம் ப்ரைம் ஏரியாவில் பரந்துபட்ட அலுவலகம் அமைத்து இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. சேட்டிலைட்களோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் பிரத்யேக‌ அதிகாரம் பெற்றவர்களாக இருந்தாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் மொத்தமே நாலே நாலு டெம்ப்ளெட் அறிவிப்புகளை சீட்டு குலுக்கிப்போட்டு எடுத்து மாற்றிமாற்றித் தருவதாக பெரும்பாலானோர் நினைப்பதால், வானிலை-மழை-புயல் என்றாலே அனைவரும் முக்கியமாக சென்னைவாசிகள் எட்டிப்பார்ப்பது பிரதீப் ஜான் ஃபேஸ்புக்கைத்தான்.

IMD, Chennai

சென்னையில் ஒரு மழைக்காலம் எப்போது வரும் என்பது குறித்து பிரதீப் ஜானிடம் கேட்டதற்கு, “ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை மக்கள் பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது. ஜூன் மாதத்தில் மொத்த மழை அளவே 52 மில்லி மீட்டராகத்தான் இருக்கும். ஜூன், ஜூலை மாத மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயராது. ஜூன் மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் கத்திரியைப் போலவே இருக்கும். இந்த மழை கண்டிப்பாக தண்ணீர் பிரச்னையை தீர்க்காது. இந்த மழை விட்டுவிட்டு தான் பெய்யும். ஒரு நாளை மழை பொழிந்தால் 5 நாள் வெயில் அடிக்கும். ஆனால் மழை வரப்போவதை நம்மால் உணர முடியும். அதனால் மழை நீரை சேகரிக்க நாம் தயாராக இருந்தால் அதை பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். வெள்ளம் வந்தாகூட பரவால்லீங்க, அந்த மழையைச் சீக்கிரம் வரச் சொல்லுங்க சாமீகளா!

Most Popular

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி...

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...