அபியை தூண்டிவிட்ட சாக்ஷி: மீண்டும் வலுக்கும் புதிய சண்டை! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தொடங்கி விறுவிறுப்பாக 10நாள் கடந்து விட்டது. கோபம், அன்பு, பொறாமை என்று போட்டியாளர்களின் நடவடிக்கையை பார்த்து ரசிகர்கள் அவரவர் குணத்தை புரிந்து கொண்டனர். அதில் ரசிகர்கள் மனதில் மிகவும் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது மீரா, அபிராமி மற்றும் வனிதா. ஏனென்றால் இவர்கள் மற்ற ஹவுஸ் மேட்ஸ்யுடன் காரணமே இல்லாமல் சண்டை போடுவது தான். 

நாளுக்கு நாள் இவர்கள் பிரச்சனை குடிகொண்டு செல்வதால் இவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபி மற்றும் மீரா இருப்பதால் கண்டிப்பாக இவர்களுள் ஒருவரை வெளியேற்றியே தீருவோம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அபிராமி, முகனை தன்னுடன் அழைத்து சென்று வந்து, ‘இவன் என் நண்பன், என்னுடையே buddy, எவளுக்காவது பிரச்னை இருந்த உங்களோட வெச்சிக்கோங்க. நான் லவ் பண்ண, அவன் மூஞ்சி பார்த்து சொல்லுவேன். எங்களுக்குள்ள எதாச்சினா நாங்க பார்த்துக்குறோம்’ என்று மிகவும் கோபமாகக் கூறிவிட்டுக் கிளம்புகிறார். 

மறைமுகமாக அபி யார திட்டுறாங்க….? ரொம்ப யோசிக்க வேண்டாம், இந்த பூகம்பம் வெடிக்க முக்கிய காரணம் நேற்று சாக்ஷி மீரா, முகனிடம் பேசிக்கொண்டதைத் தப்பாகப் புரிந்து கொண்டு அவர் உள்ளே சென்று வனிதா, அபியிடம் கூறியது தான். ஆகையால் சாக்ஷி மூலம் இன்று வீட்டிற்குள் ஒரு புது பூகம்பம்  கிளம்பியுள்ளது. 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...